தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவர்களை, மகாராஷ்டிரா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும், நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும் கண்டித்துள்ளன.

'பாபுஜி' பன்வாரிலால் இந்த சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

கவர்னர் பன்வாரிலால் புரோகித் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்வகையில், அடிப்படை இல்லாத, விஷமத்தனத்துடன், தீயநோக்குடன் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டிக்கிறோம். நாக்பூர் மற்றும் மகாராஷ்டிரா மாநில மீடியா வட்டாரங்களில், பல ஆண்டுகளாக, 'பாபுஜி' என்ற பெயரில் பன்வாரிலால் ரோகித்தை நாங்கள் நன்குஅறிவோம்.

சிறந்தகொள்கை, அப்பழுக்கற்ற நேர்மைக்கு சொந்தக்காரர் அவர். விடாமுயற்சி கொண்ட மக்கள் பிரதிநிதியாக, இந்தியாவின் மத்திய பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக வெளியாகி வரும், 'தி இடாவதா' என்ற ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக, பல கல்வி நிறுவனங்களின் திறமையான நிர்வாகியாக, பண்பட்ட தலைவராக அவர் விளங்கி வருபவர். தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும் முன் உதாரணமாக திகழ்ந்து வருபவர்.
 

இந்தியாவின் மத்திய பகுதியை சேர்ந்த பெரும்பான்மையான பத்திரிகையாள ர்களுக்கு ஒரு தந்தை போல வழிகாட்டி வருபவர். ஊழல், அநீதிக்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்து வருபவர்.

அடக்குமுறைக்கு எதிராக போராடும் பத்திரிகையா ளர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பவர். ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியை தவறான கண்ணோட்டத்தில் சித்திரிக்கமுயல்வது, வாழ்நாள் முழுவதும் பொது வாழ்க்கையில் நற்பெயருடன் செயல்பட்டு வருபவரை, அரசியல் சட்டபூர்வமான உயர்பதவியை வகித்து வருபவரை கீழ்மைபடுத்தும் முயற்சிமட்டுமல்ல, மட்டமான ரசனையும் கொண்டது.

'தி இடாவதா' நாளிதழில் ஏராளமான பெண் பத்திரிகை யாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் அவரால் நடத்தப்பட்டு வரும் அனைத்து நிறுவனங்களும், சட்டத்திற்கு உட்பட்டு, பாதுகாப்பாக பணியாற் றுவதற்கு உகந்த இடங்களாக திகழ்ந்து வருகின்றன. எனவே, பன்வாரிலால் புரோகித் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிக்கு மீண்டும் கண்டனம்தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.