வீடு வாங்கு பவர்களை பாதுகாக்கும் விதமாக திவால் மற்றும் நிதிமோசடி சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர உள்ளது. இதன் மூலம் வீடு வாங்குபவர்களின் நிதிகடன், அதற்காக உதவுபவர்கள், வங்கி நடவடிக்கைகள் போன்ற வற்றையும் இந்தசட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக புதியவிதிகளை சேர்க்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசு தலைவர் அனுமதி மூலம் இதை சட்டமாக்க மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள தாகவும், இந்தமசோதா மத்திய அமைச்சர்களின் சுற்றுக்குச் செல்ல வில்லை என்றும் தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்தசட்டம் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு புதிய சட்டபாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறினர். ஜேபீ இன்ப்ரா டெக், அமர்பாலி வீடு கட்டும் திட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், அதன் அடிப்படையில் இந்தபுதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது. வீடுவாங்குபவர்கள் தங்களின் பலநாள் சேமிப்பை வீடு வாங்குவதற்காக அளிக்கின்றனர். இந்த புதியசட்டம் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். வீடுகட்டும் திட்டங்களின் பணம் கட்டிய பலரும் திட்டமிட்டபடி வீடு கிடைக்காமல் பல ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர். இந்தசட்டத் திருத்தத்துக்கான பரிந்துரையை நிறுவனங்கள் விவகாரத் துறை செயலர் இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழு அளித்துள்ளது.

இந்த சட்டத்திருத்தத்தில் சிறியதொழில் அதிபர்களின் பிரச்சினைகளும் பேசப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு வீடுகட்ட வில்லையெனில் அந்த பில்டரின் அனுமதி ரத்துசெய்யவும் வழிவகை செய்யும். இதன் மூலம் சிறுகுறு தொழில் சேவை துறையில் மாற்றங்களை உருவாக்கும்.

திவால் மற்றும் வங்கிமோசடி சட்டத்தில் 29 ஏ பிரிவில் இந்தவிவகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க கமிட்டி பரிந்துரைசெய்யும். கடன்களை திரும்ப செலுத்ததுவதற்கு யார் பொறுப்பேற்பது என்பதையும் இதன் மூலம் முடிவு செய்யமுடியும். நீண்ட காலமாக நஷ்டத்தில் இருக்கும் திட்டங்களால் முதலீட்டாளர்கள் பாதிக்கப் படாமலிருக்க இந்த சட்டத் திருத்தம் உதவும் என்றும் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.