சினிமா நடிகர்கள் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்? என்னும் கேள்வி பலரிடமும் இருக்கிறது! சினிமா நடிகர்களையே தூக்கிவிழுங்கும் அளவுக்கு இன்று இந்திய அரசியலில் அரசியல் வாதிகளும் பத்திரிக்கை ஊடகங்களும் ஏன் நீதித் துறையும் தேர்தல் ஆணையமும் கூட நடிகர்கள் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசுவதைப் போல பேசுகிறார்களோ என்னும் சந்தேகம் எழுகிறது!

கர்னாடகத்தில் வாக்குப்பதிவு நடப்பதற்குள் அங்கிருந்து இரண்டு பொறியியல் வல்லுனர்களை அந்த மாநில அரசுமூலம் பெற்று அதேபோல பாண்டிச்சேரியில் பெற்று கேரளாவில் பெற்று தமிழகத்தில் பெற்று காவிரி மேலான்மை ஆணையம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது! கர்னாடகத்தில் தேர்தல் அறிவித்தபின்பு ஆட்சிமாற்றம் நிகழும் சூழலில் இது எப்படி சாத்தியமாகும்!

ஆணையம் அமைப்பதால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தேர்தல் ஆணையமும் சொல்கிறது! 15 நாளில் போகிற அரசிடம் ஒருநிரந்தர ஆணையை பிறப்பித்துவிட்டு போங்கள் என்று வற்புறுத்த முடியுமா? முடியாது! அப்படி வற்புறுத்துவது ஜனநாயகமும் ஆகாது!

ஸ்கீம் என்பதை நீதிமன்றமே உருவாக்கி யிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? ஜனநாயக முறையில் மாநில அரசுகளை ஒத்துக்கொள்ள வைத்துதான் செயல்படுத்த முடியும் என்பதால் தான் மத்திய அரசு ஸ்கீம் என்ன என்பதை வகுக்கவேண்டும் என்று நீதிமன்றம் சொல்கிறது!

அப்படியானால் மத்திய அரசு அதற்கு கேட்கும் கால அவகாசத்தை நீதிமன்றம் தரவேண்டும் இல்லையா? ஏன் தர மறுக்கிறது?

கர்நாடக மாநிலத்தின் இப்போதைய முதல்வர் ஆணையம் என்பது அமைக்கப்படக்கூடாது என்கிறார்! உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆணையத்தை சொல்லவில்லை என்கிறார்!

கர்னாடக முதல்வரையும் கர்னாடக அரசையும் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஸ்கீம் வகுக்க முடியுமா? என்னும் கேள்விக்கு விடைகாணும் வகையில் “ஸ்கீம்”என்பதன் வளக்கம் என்ன? என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கேட்டது! ஸ்கீம் என்பதற்கு விளக்கம் சொல்ல மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 2007 ல் வெளியான காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை நாங்கள் இணைத்துள்ளோம் என்கிறார்கள்.

இதன்பொருள் என்னவென்றால், நடுவர்மன்ற தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதை செய்யவேண்டும் என்பதாகும்.

நடுவர் மன்ற தீர்ப்பில் ஒரு மாநிலத்திற்கு இரண்டுபேர் விகிதம் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் உள்ள பொறியாளர்கள் ஆணையத்தில் இடம்பெற வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது! கர்னாடகத்தில் தேர்தல் நடக்கும்போது இது எப்படி சாத்தியமாகும்? அதுவும் கர்னாடக முதல்வர் மறுப்பு தெரிவிக்கும்போது!

எனவேதான் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்கிறது. கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதால் யாருக்கும் எந்தகெடுதலும் நிகழப் போவதில்லை! தீர்ப்பு தாமதப்படுத்தப் படவில்லை! தீர்ப்புதான் வந்துவிட்டதே! அதை நடைமுறை படுத்துவதில் கூட தாமதம் என்று சொல்ல முடியாது! இது சிலமாதங்கள் ஆகும் பணிதான்!

திட்டம் வகுக்கப்படும் வேளையில் தண்ணீர் வராது என்றில்லையே! ஏற்கெனவே எந்தகைய பங்கீட்டுமுறை காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறதோ அந்த பங்கீட்டு முறை தொடரத்தானே செய்கிறது! எனவே திட்டத்தை உருவாக்க மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் காலத்தில் யாருக்கும் பாதிப்பில்லை!

காங்கிரஸ் கட்சி ஆணையம் அமைக்கக் கூடாது என அறிவித்து விட்டது! அதன் கூட்டணி கட்சி என்னும் அளவில் திமுகவும் ஆணையம் அமைகக்கூடாது என்பதை ஆதரித்துவிட்டது!

காங்கிரசும் திமுக வும் வளக்கம்போல் தமிழகத்திற்கு துரோகம் செய்துக்கொண்டிருக்கின்றன! பாஜக நல்லமுறையில் திட்டம் வகுப்பதற்கான சூழ்நிலைக்காக கால அவகாசத்தை நீதிமன்றத்தில் கோருகிறது!

கர்நாடகத்தில் தேர்தல்முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றபின்பு திட்டத்தை உருவாக்குவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்!

காவிரிப்பிரச்சனையில் கொஞ்சமும் பகுத்தறிவை பயன்படுத்தாமல், சினிமா நடிகர்கள் வசனங்களை பேசுவதுபோல் பேசுவதை அரசியல் வாதிகள் தவிர்க்கவேண்டும்! 130 ஆண்டுகாலம் பொறுத்தது 15 நாளைக்கு பொறுக்காதாஎன்ன?

தண்ணீர் திறந்துவிடும் தற்போதைய திட்டம் நடைமுறையில்தான் உள்ளது! காவிரியில் தண்ணீர் திறப்பதற்கும் இந்த கால அவகாசத்திற்கும் சம்பந்தம் இல்லை! 

 

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நீர் பங்கீட்டு முறை நடைமுறையில்தான் இருக்கிறது! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு வருசக்கணக்கில் நடந்தபோது காவிரிநீர் எப்படி பகிரப்பட்டதோ அந்த முறையில் மாற்றம் இல்லையே!

பின்பு ஏன் சிலர் காலில் வென்னீர் ஊற்றியதைப்போல துள்ளுகிறார்கள்? அனைத்தும் அரசியல் நாடகம்! எல்லோரும் நடிகர்களாகவே உள்ளனர்! நாடகம் ஆடுகிறார்கள்!  காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டும் என்னும் அக்கரை பாஜக வை தவிற வேறு யாருக்கும் இல்லை!

மேல்முறையீடு செய்து ஆண்டுக்கணக்கில் பொறுத்தோமே! தீர்ப்பு வந்துவிட்டதே! தீர்ப்பை பிரச்சனை இல்லாமல் நடைமுறைப்படுத்த இன்னும் பதினைந்துநாள் பொறுக்கமாட்டோமா?

புதிதாக செய்யப்போகும் விதி சிக்கல் இல்லாததாக நிரந்தரமானதாக அனைவருக்கும் நன்மை பயிர்ப்பதாக இருக்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் கால அவகாசம்!

நல்ல திட்டத்தை  நிரந்தர திட்டத்தை பாஜக அரசால் மட்டும்தான் செயல்படுத்த முடியும்! காவிரியில் பாஜக தலைமையில் இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்!

  -குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.