கர்நாடக சட்ட சபை தேர்தல் பிரசாரத்தை சாம்ராஜ் நகரில் துவக்கிய பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ.க, மீதும், எடியூரப்பா மீதும் கர்நாடகாமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். கர்நாடகாவில் மாற்றத்திற்கான அலை வீசுவது டில்லிக்கு தெரிந்துள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.,விற்கு ஆதரவாக அலை அல்ல, சூறாவளிவீசுகிறது. கர்நாடக சட்ட சபை தேர்தலில் பா.ஜ., அமோகவெற்றி பெறும். கர்நாடகாவின் எதிர்கால முதல்வருடன் அமர்ந்துள்ளேன். எடியூரப்பா கர்நாடக முதல்வராவார்.
 

ஏப்ரல் 28ம் தேதி இந்தியாவின் அனைத்து கிராமங்களும் மின்சார மயமாக்கப்பட்டன. உழைப்பாளர் தினமான இன்று தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நாட்டின் இந்தவரலாற்று சாதனையை நான் அர்ப்பணிக்க வேண்டும். 2009 ல் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வழங்குவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2005 ல் கூறினார். ஆனால் என்ன நடந்தது. காங்கிரஸ் டாக்டர் மன்மோகன் சிங்கைக் எப்படிகையாண்டது என்று நாம் பார்த்தோம் அவர்கள் நியாயங்களை கிழித்தெறிந்து அவரை அவமதித்தார்கள்.

கண்ணியத்திற்கான எல்லையை காங்கிரஸ் தலைவர் உடைத்துவிட்டார். பா.ஜ.,வை திட்டுவதில் ராகுல் தீவிரமாக உள்ளார். அதற்கு பதில் மக்களை போற்றவேண்டும். ஏழைகளுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. வாரிசு அரசியலில் மட்டும் தான் ராகுலுக்கு நம்பிக்கை உள்ளது. திறமையில் இல்லை. கிராமங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் என்ன செய்துள்ளது. எங்களின் இலக்குவளர்ச்சிதான். அரசியல் அல்ல. 70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை நாங்கள் செய்துள்ளோம்.
 

நமது வரலாறு தெரியாதவர்கள்தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர். வந்தே மாதரத்தை இழிவுபடுத்தியவர்கள் தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர்.மன்மோகன் சிங்கிற்கு ராகுல் மரியாதை அளிக்க வில்லை. தனது தாய் சோனியாவின் வார்த்தைகளுக்கு ராகுல் மதிப்பளிக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற மன்மோகன் தவறி விட்டார்.  பெரிய வாக்குறுதிகளைஅளித்தகாங்கிரஸ், அதனை மோடி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது.
 

15 நிமிடங்கள் விவாதம் நடத்த தயாரா என ராகுல் சவால்விடுத்துள்ளார். நாங்கள் கடும் உழைப்பாளிகள். எவ்வாறு வாரிசுகள் முன் அமரமுடியும். ராகுலால் 15 நிமிடங்கள் பேசமுடியுமா? வாரிசு அரசியலுக்கு எதிராக பா.ஜ., போராடிவருகிறது. வாரிசு ராகுல் முன் காங்கிரஸ் தொண்டர்கள்கூட பேசமாட்டார்கள். ராகுல் வார்த்தைகள் என்னை காயப்படுத்தாது. வாரிசு அரசயல் வாதியிடமிருந்து இதை தவிர எதிர்பார்க்கமுடியாது. கர்நாடக அரசின் சாதனைகள் குறித்து 15 நிமிடங்கள் ராகுலால் பேசமுடியுமா? தனது கட்சி தலைவர்களின் பெயர்களை ராகுலால் உச்சரிக்க முடியவில்லை. . இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.