முத்ரா வங்கிமூலம் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 கோடியை தாண்டுகிறது! இந்தியாவில் ஜனத்தொகை 120 கோடி என்றால், குடும்பங்கள் 30 கோடி இருக்கலாம் என்பது கணக்கு! 30 கோடி குடும்பங்களில் 12 கோடி குடும்பங்களை சார்ந்தவர்கள் தொழில் துவங்க அல்லது வியாபாரம் துவங்க அல்லது செய்துக்கொண்டிருந்த தொழில் வியாபாரத்தை வலுப்படுத்த முத்ரா வங்கி திட்டத்தில் கடன் பெற்று தொழில் மற்றும் வியாபாரம் செய்கிறார்கள்!

கடன் பெற்று தொழில் அல்லது வியாபாரம் என்றால் குறைந்த அளவு இரண்டுபேருக்காவது அதில் வேலை இருக்கும்! அதிகப்படியாக 5 அல்லது 10 வரைக்கூட ஆட்கள் பணியில் இருக்கலாம்! நாம் குறைந்த அளவு 2 நபர்களுக்கு வேலை என எடுத்துக்கொண்டால் முத்தியா வங்கி திட்டம் 24 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறது!

முப்பது கோடி குடும்பங்கள் இருக்கும் நாட்டில் 24 கோடி நபர்களுக்கு வேலை என்றால் இது சாதாரண சாதனை அல்ல! தமிழகத்தில் ஒரு கோடியே 36 லட்சம் நபர்கள் முத்திரா வங்கியில் கடன் பெற்று வியாபாரம் அல்லது தொழில் செய்துக்கொண்டிருக்கிறார்கள்! இங்கேயும் இரண்டுகோடியே எழுபத்திரண்டு லட்சம் நபர்களுக்கு மத்திய அரசு முத்திரா திட்டம் மூலமாக மட்டும் வேலை வழங்கியிருக்கிறது!

மூளை குழம்பியவர்களைப்போல சிலர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மோடிக்கு தெரியவில்லை என்கிறார்கள்! கள்ளப்பண ஒழிப்பில் தங்களிடம் இருந்த கள்ளப்பணத்தை இழந்தவர்கள்தான் மோடிமீது கோபத்தில் இப்படி பேசுகிறார்கள்!

இந்தியாவில் வேலையற்றோர் யாரும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் முத்திரா திட்டத்தை பாரதிய ஜனதாகட்சி கொண்டுவந்தது!

இது வழக்கமாக வங்கியில் கொடுக்கும் தொழில் கடன் அல்ல! முத்ரா கடன் வங்கியின் டெப்பாசிட் தொகையில் கொடுக்கப்படுவது இல்லை!

மோடி அரசு முதல் பட்ஜெட்டில் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடியும், இரண்டாம் பட்ஜெட்டில் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியும், மூன்றாம் பட்ஜெட்டில் 2 லட்சத்து 44 ஆயிரம் கோடியும் கோடியும், நான்காவது பட்ஜெட்டில் 3 லட்சம் கோடியும் மொத்தம் 8 லட்சத்து 44 ஆயிரம் கோடியை வங்கிகளுக்கு முத்ரா கடனுக்காக தருவதற்கு ஒதுக்கிவைத்து, அதில் இதுவரை 5 லட்சம் கோடியை தாண்டி வங்கிகளுக்கு தரப்பட்டு விட்டது!

வங்கிகள் கடன் தந்து மத்திய அரசிடமிருந்து அந்த கடன் வழங்கிய தொகையை வாங்கிக்கொள்ளவேண்டும்! கடன் பெற்றவர்கள் திருப்பிச்செலுத்தும் தொகையை வங்கிகள் மத்திய அரசுக்கு திருப்பி செலுத்திவிடவேண்டும்! இந்த கடனுக்காக ஜாமீனோ செக்குருட்டியோ கேட்கக்கூடாது வாங்கக்கூடாது! மத்திய அரசிடம் வாங்கி மக்களுக்கு தந்து கணக்கு வைத்துக்கொள்வது மட்டும்தான் வங்கியினர் வேலை!

திருப்பிச்செலுத்தவில்லையென்றால் என்ன செய்வது என்னும் கேள்வியை வங்கியினர் கேட்கவேண்டிய அவசியம் இல்லை! இது மத்திய அரசின் நேரடி பணம்!

மத்திய அரசு, இன்னொருவர் ஜாமீனோ வேலைபார்க்கும் உத்திரவாதமோ சொத்து ஜாமீனோ எதுவுமே இல்லாமல் தனி ஒரு இந்தியனின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் 10 லட்சம் வரை வழங்குகிறது!\

இந்தியன் என்பதற்கு ஆதாரமும், சம்மந்தப்பட்ட தொழில் அல்லது வியாபாரம் தெரியும் என்பதற்கான ஆதாரமும் இருந்தால் போதும், ஏற்கெனவே கடன் வாங்கி அதை முறையாக திருப்பி செலுத்தாதவர் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவராகவும் இருக்கவேண்டும்!

தேவைக்கு தகுந்தாற்போல 10 லட்சம்வரை தரவேண்டியது வங்கியின் கடமை! திருப்பி செலுத்தாவிட்டால் வசூல் செய்வதற்கு உத்தரவாதமாக ஏதாவது கொடு என்று வங்கி கேட்கக்கூடாது!  இதுதான் முத்ரா கடனுக்கும் மற்ற கடன்களுக்கும் உள்ள வித்தியாசம்!

இது வங்கிகள் தங்களின் டெப்பாசிட்டை வைத்து தரும் கடன் அல்ல! மத்திய அரசு தனது பணத்தை செக்குருட்டி இல்லாமல் தருவதுதான் முத்ராகடன்!

இதன் மூலம் தமிழகத்தில் 2 கோடியே 72 ஆயிரம் பேர் உட்பட இந்தியா முழுமையும் 24 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு முத்ரா வங்கி கடன் திட்டத்தின் மூலம் மட்டும் சுய வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது! இதில் 74 சதவிகிதத்தினர் பெண்கள்!

கடந்த நான்கு ஆண்டுகளில், 30 கோடி இந்திய குடும்பங்களில் 24 கோடி குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கிறது பாஜக அரசு!

–    குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.