ஜெயநகர் பாஜக எம்எல்ஏ-வும் வரும் சட்டசபை தேர்தலின் வேட்பாளருமான பி.என்.விஜய குமார் திடீரென மரணமடைந்தார்.

 கர்நாடகாவின் ஜெயநகர் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ-வும் வரும் சட்டசபைத் தேர்தலின் வேட்பாளருமான பி.என்.விஜயகுமார், மாரடைப்புகாரணமாகத் திடீரென உயிரிழந்துள்ளார். இது கர்நாடகத்தேர்தல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஜெய நகர் தொகுதியில் விஜய குமார் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்டமாரடைப்பால் அதே இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். பிறகு, அவர் உடனடியாக ஜெயதேவா இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்டியாலஜி கல்லூரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க-வினர் மத்தியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். பா.ஜ.க தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயகுமாருக்கு இரங்கல்தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளது. அதில், “அவருடைய பணிவு, கட்சி மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை மிகவும்பெரியது. இவரின் பிரிவு எங்களுக்கு ஒருபெரிய இழப்பு. அவர் குடும்பத்தினருக்கு எங்களின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.