சென்னையைசேர்ந்த ஆர்.திருமணி (வயது 22) என்பவர் குடும்பத்துடன் காஷ்மீர் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு குல்மார்க்கில் இருந்து ஸ்ரீ நகர் நோக்கி ஒருவாகனத்தில் சென்றபோது நர்பால் என்ற இடத்தில் கல்வீச்சாளர்கள் அந்தவாகனத்தின் மீது கற்களை வீசியதில் திருமணியின் தலை மற்றும் சிலஇடங்களில் பலத்தகாயம் ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட திருமணி நேற்று இரவு சிகிச்சைபலனின்றி இறந்தார். இந்த சம்பவத்துக்கு பலரும்கண்டனம் தெரிவித்தனர். 

 

காஷ்மீரில் நடந்த கல் வீச்சில் சென்னை சுற்றுலா பயணி பலியானதால் எனதுதலை அவமானத்தால் தாழ்ந்து விட்டது என்று முதல்–மந்திரி மெஹபூபா முப்தி மிகவும் வருத்தத்துடன் கூறினார். இதற்கிடையே காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 130 தமிழர்களை பாதுகாப்பாக சென்னை அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. கல்வீச்சு சம்பவத்தில் உயிர் இழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்வழங்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். திருமணியின் உடலை விரைவாக அவரது சொந்தஊருக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு டெல்லியில் உள்ள தமிழக இல்லம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஜம்மு காஷ்மீர் அரசும் தேவையான உதவிகளை செய்தது.

 

திருமணியின் உடல் காஷ்மீரில் இருந்து விமானம்மூலம் சென்னை மீனம்பாக்கம் வந்தடைந்தது. அங்கிருந்து ஆவடியில் உள்ள அவரது வீட்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப் பட்டது. அவரது உடலை கண்ட உறவினர்களும் அப்பகுதி மக்களும் சோகம்தாளாமல் கதறி அழுதகாட்சி நெஞ்சை உடைய செய்தது. காஷ்மீர் கல் வீச்சு சம்பவத்தில் உயிரிழந்த என் மகன் திருமணியின் உடலை தமிழகம் சொண்டுவர காஷ்மீர் அரசு, காவல் துறை உதவி செய்தது. கல்வீச்சு சம்பவத்தின் போது அனைவரும் தாழ்வாக இருந்ததால் தப்பித்தோம், தாழ்வாக இருக்க முயன்ற போது படுகாயமடைந்து என் மகன் உயிரிழந்தார் என திருமணியின் தந்தை கூறிஉள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.