கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க மெஜாரிட்டிக்கான 113 இலக்கை பெறவில்லை என பாஜகவினர் கவலையாக இருந்தாலும் பா.ஜ.க 104-தொகுதிகளை எப்படி வென்றனர் என காங்கிரஸ் ம.ஜ.த மட்டுமல்ல சரத்பவர் சிவசேனா வரை பேரதிர்ச்சியில் உள்ளனர்…

ஏன் என்றால் கர்நாடக அரசியல் காய்நகர்த்தல்கள் காங்கிரசுக்கு 122- தொகுதிகள் நிச்சயம் என்ற நம்பிக்கையை கொடுத்திருந்தன..

கர்நாடகாவின் இருபெரும் சாதிகள் 1]ஒக்காலிக்கர்கள் [கவுடா]
2] லிங்காயத்துகள்

இவர்களில் ஒக்காலிக்கர்கள் நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்து தங்கள் சாதிக்கு கவுரவம் தேடித்தந்த தேவகவுடாவை தங்கள் சமூக தலைவராக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக கடந்த 20- வருடங்களாக மதசார்பற்ற ஜனதாதளத்தை ஆதரித்து வருகின்றனர்.

பெயர் மதசார்பற்ற ஜனதாதளம் என்றாலும் அது ஒக்காலிக்கர் ஜாதி கட்சியாகவே உள்ளது.
1993-ல் கர்நாடகாவில்111- இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியிலிருந்த மதசார்பற்ற ஜனதாதளம் ஒக்காலிக்கர் ஆதிக்கதின் காரணமாக மாநிலத்திலுள்ள பிற ஜாதியினரால் புறக்கணிக்கப்பட்டது… பிற ஜாதியினர் புறக்கணித்ததன் காரணமாக ஒக்காலிக்கர்களால் அக்கட்சி கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கப்படுகிறது.

ஒக்காலிக்கர்கள் மதசார்பற்ற ஜனதாதளத்தை ஆதரிப்பதால் கவுடாக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மைசூர் மகாணத்தில் அக்கட்சி 32-தொகுதிகளில் எளிதாக ஜெயித்து விடும்… மாநிலத்தின் மற்ற தொகுதிகளில் ஒக்காலிகர்கள் மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு வாக்களிப்பதால் பா.ஜ.கவின் ஓட்டு வங்கியில் பெரும் ஓட்டை விழுந்து விடுகிறது..

சதானந்த கவுடாவை முன்னிறுத்தி ஒக்காலிக்கர்களை ஈர்க்க பா.ஜ.க செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது மட்டுமல்ல..இன்னொரு பெரும் சாதியான லிங்காயத்துகளை பா.ஜ.கவின் எதிரியாக்கியது..2013-ல் பாஜக 40-தொகுதிகள் என்ற படு வீழ்ச்சியை சந்திக்க இதுவே முதல் காரணம்..

2- கோடி மக்கள் தொகை கொண்ட லிங்காயத்துகளே கர்நாடகாவின் பெரும் சாதி..
எடியூரப்பா இச்சமூகத்தை சார்ந்தவரே..சிவனை மட்டுமே வழிபடும் தீவிர ஹிந்ததுவர்களான லிங்காயத்துகள் எடியூரப்பா தலமையில பாஜக பக்கம் சாய்ந்த்தாலே 2008- கர்நாடக தேர்தலில் 110- தொகுதிகளில் வெற்றிப்பெற்று பாஜக முதல்வர் அரியணையேறியது.

2018- சட்டமன்ற தேர்தல் காங்கிரசுக்கு உண்மையிலே சுலபமாக இருந்தது.

தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ், விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது போல, கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது..
இதன் மூலம் ஒக்காலிக்கர்கள்- இந்து தலித் வாக்குகள் மாநிலம் முழுவதும் மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு விழுவதால் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்கும் என காங்கிரஸ் கணக்கிட்டது.

லிங்காயத்துகளை தனிமதமாக அங்கீகரித்தன் மூலம் அச்சமூகத்திலிருந்தும் பெரும் ஓட்டு வங்கியை காங்கிரஸ் தங்கள் பக்கம் கவனமாக நகர்த்தியது..

16% முஸ்லீம் , கிறிஸ்தவர் சிறுபான்மை வாக்குககள் பதிவாகும் பொறுப்பை பல என்.ஜி.ஓக்கள் ஏற்றுக்கொண்டிருந்தன… ஆக மொத்தம் 40% வாக்குகள் 122 தொகுதிகளை காங்கிரஸ் சுலபமாக எதிர்ப்பார்த்தது..

தன்னை சுற்றி காங்கிரஸ் பின்னிய வலயை அறுத்தெறிய அமித்ஷா செய்த முதல் காரியம் ஒக்காலிக்கர்கள் அதிகம் வாழும் மைசூர் மண்டலத்தில் தந்திரமாக பின் வாங்கியது.. அங்கு டம்மி வேட்பாளர்களை நிறுத்திய பா.ஜ.க மதசார்பற்ற ஜனதாதளம் வெற்றி பெறுவதை தடுக்கவில்லை..

கர்நாடகாவில் 25-தொகுதிகளில் 5000, 6000 ஓட்டுகள் மட்டுமே பெற்று பாஜக டொபாசிட் இழந்ததின் ரகசியம் இது தான்..

மாறாக பா,ஜ,க அங்கு மதசார்பற்ற ஜனதாதளத்தை கடுமையாக எதிர்த்திருந்தால் பாஜகவும் தோற்றிருக்கும், மதசார்பற்ற ஜனதாதளமும் தோற்றிருக்கும்.. காங்கிரஸ் வென்று 100-தொகுதிகளை தாண்டியிருக்கும்..

பாஜகவுக்கு காங்கிரஸ் விரித்த வலையை அமித்ஷா அப்படியே திருப்பி காங்கிரசுக்கு விரித்து விட்டார் எப்படி என்கிறீர்களா?

இப்போதுள்ள
பாஜக-104
காங்கிரஸ்-78
ம.ஜ.த-38

என்ற நிலையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி அமைப்பது என்பது நடக்கவே முடியாத காரியம்..

முதல் காரணம்…

ஒக்காலிக்கர் குமாரசுவாமி முதல்வராவதை காங்கிரஸிலுள்ள லிங்காயத்து சாதி எம்.எல்.ஏக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.. எடியூரப்பா லிங்காயத்தார் முதல்வராவதை காங்கிரஸ் கவிழ்த்தாகவே லிங்காயத்தார் கருதுவர்…

இரண்டாவது காரணம்…

மதசார்பற்ற ஜனதாதள் கவுடா எம்.எல்.ஏக்களுக்கு பாஜக பின் வாங்கிய கருணை காரணமாகவே தாங்கள் வெற்றிபெற்றோம் என்பது தெரியும்..ஒரு வேளை ஆட்சி கவிழ்ந்து மறுதேர்தல் வந்தால் தங்கள் தொகுதியில் பாஜக வலுவான வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெற முடியாது என்பது தெரியும்..ஆகவே அவர்கள் பாஜகவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்க மாட்டார்கள்….

ஆகவே எப்படியும் கர்நாடக ஆட்சி களம் தாமரை மலரும் குளமாகவே உள்ளது..

தாமரை மலர்வதை அமித்ஷா தாமதப்படுத்தினால் பாராளுமன்றத்திற்கு அதிக தாமரைகளை அறுவடை செய்ய காத்திருக்கிறார் என்று அர்த்தம்…!!!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.