பிரதமர் நரேந்திரமோடி, ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். ரஷியாவின் சோச்சி நகரில், ரஷிய அதிபர் புதினை அவர் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பிரச்சினைகள், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்து கிறார்கள். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால், இந்தியா மற்றும் ரஷியாவுக்கு ஏற்படும் பொருளாதாரபாதிப்புகள், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நிலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புமாநாடு, பிரிக்ஸ் மாநாடு விவகாரங்கள் ஆகியவை பற்றியும் அவர்கள் விவாதிக்கிறார்கள்.

மேலும், ரஷியா மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரதடையால், இந்தியா-ரஷியா பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்படும்பாதிப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்தியா-ரஷியா இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பை மூன்றாம் நாடுகளுக்கு விரிவுபடுத்துவது, கொரிய தீபகற்ப நிலவரம் ஆகியவை பற்றியும் பேசுகிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி நேற்று தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கருத்து வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நட்புரீதியான ரஷிய மக்களுக்கு வணக்கம். ரஷியாவின் சோச்சிநகருக்கு செல்வதற்கும், ரஷிய அதிபர் புதினை சந்திப்பதற்கும் ஆவலாக இருக்கிறேன். அவரைசந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான்.

புதினுடனான பேச்சு வார்த்தை, இந்தியா-ரஷியா இடையிலான விசேஷ, வியூகம் சார்ந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு மோடி கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.