முத்ரா கடன்திட்டத்தின் மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம்கோடி கடன் அளிக்கப் பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மேலும் கூறுகையில், முந்தைய அரசாங்கம் சிறு தொழில்களுக்கு எதையும் செய்ய வில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இந்ததிட்டத்தின் நோக்கம் பொது மக்களுக்கு சிறுதொழில் கடன்களை அளித்து அவர்களுக்கான சிறந்த பொருளாதாரப் பாதையை உருவாக்குவதாகும். அவர்களின் கனவுகளை நிறைவேற்று வதுடன், சிறுதொழில் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கமுடியும்.

பிரதம மந்திரி முத்ரா யோஜனா என்கிற இந்ததிட்டம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரதமர் அறிமுகம் செய்தார். சிறு நிறுவனங்கள், சிறு, குறுதொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி அளிக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த நிதியாண்டில் இந்ததிட்டத்தின் மூலம் ரூ.2.53 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5.73 லட்சம்கோடி கடன் அளிக்கப் பட்டுள்ளது.

இந்த கடன் உதவி மூலம் நாடுமுழுவதும் பலன் பெற்றவர்களுடன் பிரதமர் காணொலிகாட்சி மூலம் உரையாடினார். இந்தகடன் திட்டம் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படுவதால் இந்தகடனை வாங்கியவர்கள் அதனை முறையாக திருப்பிசெலுத்தி விடுகின்றனர்.

25-30 ஆண்டுகளுக்கு முன்னர் கடன்வாங்குவதை நினைத்துப் பாருங்கள்., அரசியல் வாதிகள் அல்லது அரசியல் வாதிகளுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன்கிடைக்கும். அவர்கள் கடனை திருப்பிசெலுத்துவதற்கு நினைக்க மாட்டார்கள். அவர்கள் கடன்களை பயன் படுத்தி கொள்ள ஆர்வம்காட்டினர். ஆனால் அந்த கடன்களின் முடிவு சிறப்பானதாக இல்லை.

ஆனால் இப்போதைய அரசாங்கத்தில் கடன் அளிக்கும் நடைமுறைகளில் இடைத்தரகர்களுக்கு இடம் இல்லை. வங்கிகளில் இருந்து நேரடியாக பெண்களும் இளைஞர்களும் கடன்பெற்று தங்களது தொழிலை தொடங்கிவிட என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.

நான் சிறு தொழில்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். முதல்தலைமுறை தொழில் முனைவோரின் தொழில் திறமைகளை நம்புகிறேன். முத்ரா திட்டத்தின்கீழ் கடன் பெற்று அவர்கள் தங்களது சொந்த நிதியில் தொழிலைத் தொடங்கலாம்.

முத்ரா திட்டத்தின் கீழ் அரசு ஏழை மக்களுக்கும், சிறுதொழில்களுக்கும் எந்த பிணையமும் இல்லாமல் கடன் வழங்குகிறது. புதியதொழிலை தொடங்கவும், ஏற்கெனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்யவும் இந்த திட்டத்தில் கடன்பெறும் வகையில் முத்ரா திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுய தொழில்களை உருவாக்கியுள்ளது. வேலை வாய்ப்புகளை இரண்டு மடங்காக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 12 கோடி பயனாளிகள் ரூ.6 லட்சம்கோடி கடன் பெற்றுள்ளனர்.

இந்த 12 கோடி பயனாளிகளில் 28 சதவீதம் பேர், அதாவது 3.2 கோடி பயனாளிகள் முதல்தலைமுறை தொழில் முனைவோர்கள். அவர்கள் இந்ததிட்டத்தை தெரிந்துகொண்டு பயன் பெற்றுள்ளனர். 74 சதவீதம் பேர் அதாவது சுமார் 9 கோடிபயனாளிகள் பெண்களாக உள்ளனர். இதில் 55 சதவீதம் மக்கள் எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி சேர்ந்தவர்களாவர். இதில் புதியதொழில்களை தொடங்கிவர்களும் இருக்கின்றனர்.

முன்னர் வங்கிகளின் கடன்வாங்க வேண்டும் என்றால் பணக்காரர்களாக இருக்கவேண்டும், அல்லது அவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்கிறநிலை இருந்தது. ஏழைமக்கள் வங்கிக்கடனிலிருந்து அந்நியப்பட்டு இருந்தனர். அவர்கள் மிக அதிகமாக வட்டிக்கு வெளியில் கடன்வாங்குபவர்களாக இருந்தனர். ஆனால் முத்ரா திட்டம் இளைஞர்களை வங்கிகளுடன் இணைத்துள்ளது.

முத்ரா திட்டத்தின் மூலம் கடன்பெறுவதில் எந்தபாரபட்சமும் கிடையாது. இதனால் இந்ததிட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. முத்ரா கடன்திட்டம் பல ஏழை குடிமக்களை நிதிசார்ந்த பொதுவெளிக்கு கொண்டு வந்துள்ளது. இதன் ஒருபகுதியாக வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி உள்ளது. இந்த வங்கிகளின் கடன் வழங்கும் இலக்கில் முத்ரா ஒருதிட்டமாக உள்ளது.

முத்ரா திட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தால் நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலைதேடி நகரங்களுக்கு இடம் பெயர்ந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.