தேசியம், தேசபக்தி பற்றி, நான் அறிந்ததை, உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இங்கு வந்துள்ளேன். தேசியம் என்பது, ஒருநாட்டின் சொந்த அடையாளம்; அது போற்றுதலுக்குரியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவியாபாரிகள், சுற்றுலா பயணியர் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.

இந்தியர்கள், கல்வி, நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதாக கூறி, அவர்கள் வியப்படைந்தனர். நம் நாட்டைச்சேர்ந்த பல்கலைகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை கவர்ந்து இழுத்தன. உலகம் முழுவதையும், நாம் ஒரேகுடும்பமாக பார்க்கிறோம்.

சகிப்புத்தன்மையே, நம் நாட்டின் மிகப் பெரிய பலமாக உள்ளது. நம்நாட்டை, மதம், சகிப்புத்தன்மையின்மை என்பதன் வாயிலாக வரையறை செய்தால், அது, நம் அடையாளத்தையே சீர்குலைத்து விடும். நம் நாட்டின் பன்முகத் தன்மையை கொண்டாடுகிறோம். எந்த வகையிலும், துவேசம்கூடாது; அது, மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

சகிப்புத்தன்மையற்ற செயல், தேசத்தின் அடையாளத்தை நீர்த்துப் போகச் செய்யும்.

பல்வேறு சாம்ராஜ்யங்களைச் சேர்ந்த அரசர்கள், நம் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். நம் நாட்டில் பின்பற்றப்படும் பல வகை கலாசாரங்கள், நம்பிக்கைகளே, நம்மை சிறப்பித்து, சகிப்புத் தன்மை உடையவர்களாக செய்துள்ளது.

நவீன இந்தியாவை உருவாக்கியதில், பல தலைவர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது; இது, இனம், மதத்தால் ஆனதுகிடையாது. 'இந்திய தேசியம் என்பது, பிரத்யேகமானது அல்ல; அதே சமயம் அது அழிக்கக்கூடிய சக்தியும் அல்ல' என, மஹாத்மா காந்தி கூறினார்.

'ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பிறமதங்கள் சேர்ந்த ஒரு அமைப்பே, இந்திய தேசியம்' என, ஜவஹர்லால் நேரு கூறினார். ஜனநாயகம் என்பது நமக்கு அளிக்கப்பட்ட பரிசல்ல; ஆனால், அதுமிகவும் புனிதமானது. பேரரசுகளாக சிதறிக் கிடந்த பல்வேறு சமஸ்தானங்களை இணைந்து, ஒரேதேசமாக உருவாக்கிய, சர்தார் வல்லபாய் படேல், மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர். பன்முகத் தன்மை வாய்ந்த கலாசாரமே, நம் நாட்டின் சிறப்பாக உள்ளது.

என், 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில், நான் கற்றதை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நம் நாடு, உயிர்ப்பு தன்மையுடன் இருக்க, அதன் பன்முகத் தன்மையே காரணம். மதச்சார்பின்மை என்பதே என் நம்பிக்கை, அதை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

நான் கண்மூடி, இந்தியாவை பற்றி நினைத்து பார்க்கையில், மிகவும் பிரமிப்பாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை, பரந்துவிரிந்த இந்த தேசத்தில், எத்தனை மதங்கள், எத்தனைமொழிகள், எத்தனை வகையான உணவு உட்கொள்ளும் மனிதர்கள் உள்ளனர்.

இவை அனைத்தும் சேர்ந்ததே இந்தியா. இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், ஒரே அரசியல் சாசனத்தின் கீழ் அனைவரும் இணைகிறோம். இந்த ஒருமித்த அடையாளத்தையே, பாரதம் என்கிறோம். பல்வேறுமதங்கள், மொழிகளைச் சேர்ந்த நாம், ஒரேகொடியின் கீழ், இந்தியர்களாக உள்ளோம். ஒவ்வொரு நாளும், நம்மைச் சுற்றி, வன்முறை அதிகரித்து

 

வருகிறது. கோபம், வன்முறையிலிருந்து விலகி, அமைதி, சந்தோசத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

இங்குள்ள இளைஞர்கள், பயிற்சி பெற்றவர்களாக உள்ளீர்கள். அமைதிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நம் தாய்நாட்டிற்கு அதுவே தேவை. உலக மகிழ்ச்சிக்கான குறியீட்டில், நாம் மிகவும் பின்தங்கி யுள்ளோம். நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க என்ன வழியோ, அதில் நாம் கவனம்செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.