கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சிஅமைந்துள்ளது. மந்திரிசபை விரிவாக்கம் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதில் புதிதாக 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். காங்கிரசில் எச்.கே.பட்டீல், எம்.பி.பட்டீல் போன்ற மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது. அதனால் அவர்கள் காங்கிரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். இது, கூட்டணி ஆட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக சட்டசபையில் பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 78 எம்எல்ஏ.க்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 37 எம்எல்ஏ.க்களும் இருக்கிறார்கள். சுயேச் சைகள் 2 பேர் உள்ளனர். 3 இடங்கள் காலியாக உள்ளன. 224 தொகுதிகளைகொண்ட கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

 

கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) மற்றும் சுயேச்சைகளின் பலம் 117 ஆக உள்ளது. இதில் 5 பேர் பதவியை ராஜினாமாசெய்தால் இந்த கூட்டணி தனது பெரும்பான்மையை இழந்துவிடும். அதே நேரத்தில் பா.ஜனதாவின் பெரும்பான்மைக்கு இன்னும் 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மூன்று கட்சிகளிலுமே, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் ஆதரவும் மிக முக்கியபங்கு ஆற்றுகிறது.

 

அதனால் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ள பா.ஜனதா மாநிலத்தில் நிலவும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்துவருகிறது.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.