"இன்னும் ஓர்முறை வேறு கோணத்தில் முயற்சி செய்யலாம்" என்பது மட்டுமே வெற்றியின் தாரக மந்திரம். எப்படியோ பலதோல்விகளை உடைத்தது, இன்று வெற்றியை நோக்கி நமது, காவேரி ஜெட் இன்ஜின்..

சுதந்திரம் அடைந்ததிலிருந்து போர்விமானம் தயரிக்க வேண்டும் என்பது நம் கணவு..போர் விமானம் கூட தயாரித்து விட்டோம் , அதற்கு இன்ஜினை தயாரிக்க முடியவில்லை. இந்தியாவின் Turbo ஜெட் இன்ஜின் கணவு நேற்று வரை கூட கணவாகவே இருந்தது வந்துள்ளது..

'நாம் தயாரித்துவிட்டால், வெளிநாட்டில் இருந்து விமானங்கள் வாங்கி ஊழல்செய்ய முடியாதே", என்ற எண்ணம் கூட, இந்தியாவால் 60 ஆண்டுகள் ஜெட்இன்ஜின் தயரிக்க முடியாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்..

உலகத்தில் ரஷ்யா, அமேரிக்கா france ஜெர்மனி,ஆகிய நாட்டுகளிடம் மட்டுமே ஜெட்இன்ஜின் டெக்னாலஜி உள்ளது.. அந்த வரிசையில் அடுத்தது இந்தியா இனிசேருகிறது..

இந்த தொழில் நுட்பத்தை காப்பி அடித்து உருவாக்க முடியாத தன்மைகொண்டதல் சைனாவால் , நேற்றுவரை கூட தன் முயற்ச்சியில் வெற்றி பெற முடியவில்லை..

நாம் சுயஜெட் இன்ஜின் உருவாக்கும் திட்டம் ,30 ஆண்டுகளுக்கு முன்பே துவக்கியது, 1996 இல் இந்தியா காவேரி என்ற பெயரில் ஒருஇன்ஜினை உருவாக்கியது.. அந்த இன்ஜின் பல ஆண்டுகளாக தேவையன உந்துவிசையை தராமல் தோல்வி இன்ஜினாகவே இருந்தது வந்துள்ளது..

பல திருந்தங்களுக்கு பின் காவேரி ஜெட் இன்ஜின் 2015 மீண்டும் சோதிக்க பட்ட போதும், உந்துவிசை (Thrust) போதவில்லை, எனவே திட்டம் கைவிடும் நிலைக்குபோனது..

ஆனால் இந்த அரசு வேறுவிதமாக யோசித்தது.. தொழில்நுட்ப உள்ள நாடுகளில் நாம் உதவிகேட்டால் அது மறுக்காமல் , உதவிசெய்ய முன்வர வேண்டும் ,என திட்டமிட்டது. பொதுவாத இதுபோல் தொழில்நுட்ப உதவிகளை எந்தநாடும் செய்வதில்லை. என்றுமே இந்தியாவிற்கு பிரான்ஸின் தொழில் நுட்பம் மேல் ஒருகாதல்..

பிரான்சை வழிக்குகொண்டு வர, பிரான்ஸிடம் 36 ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுத்தது… அதன் உபபலனாக நம் காவேரி இன்ஜினை மேம்படுத்த, மேற்பார்வை இட வேண்டும் என ஒப்பந்தம்போட்டது.. அதன் படி 2017 காவேரி இன்ஜினை மேம்படுத்தும் பணிதுவங்கியது..

ஒரே வருடத்திற்குள் இன்று , இந்திய அந்த இன்ஜினை மேம்படுத்தி விட்டது என செய்திபடிக்கும் போது, என்னால் கூட இந்த இமாலய சாதனையை நம்பமுடியவில்லை..

நம் விஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என சொல்வதைவிட. இந்த அரசு தான் வேறு கோணத்தில் யோசித்து நம்மை வெற்றி பெறவைத்துள்ளது, என சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை..அடுத்த வருடம் நம் தேஜஸ் விமானத்தில் இந்த இன்ஜின் பொருத்த படும் ,2020 முதல் 100% மெட் இன் இந்தியா விமானம் விண்ணில் பறக்கும்..

இனி ,உலகில் சொந்த போர்விமானம் செய்யும் தொழில் நுட்பம் உள்ள ஐந்தாவது நாடு இந்தியா.. நாம் உருவாக்கிய தேஜஸ் விமானம், இதுவரை 4000 ஆயிரம் முறை ஒரு சிறு விபத்துகூட இல்லாமல் பறத்து உலக சாதனை புரிந்துள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டும்..

இனி வானமும் நம்வசம் !!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.