என்ன மனுஷன்ய்யா இந்த மோடி… பிழைக்கதெரியாத ஆளா இருக்காரு..சுற்றி இவ்வளவு உறவு இருக்கு ஆனால் யாரும் அவரை உபயோகப் படுத்தி சம்பாதிக்க விடவில்லை…

இந்த நீட் தேர்வு விசயத்தில்கூட அழகா மருத்துவ கல்லூரி நடத்துபவர்களிடம் நல்லா கல்லா கட்டிட்டு போயிருக்கலாம். ஆனா, பாருங்க, கல்லா கட்டலைன்னாலும் பரவாயில் லைன்னு நீட்தேர்வை அடமா நடத்திவிட்டார்…

பெட்ரோல் விலையை குறைச்சி எளிதா வாக்குகள அல்லலாம். நாடு எப்படியாவது போக ட்டும்னு சொல்லிட்டு.. ஆனால், பாருங்க.. அதசெய்யாமல், நாட்டின் மூலை முடிக்கிற்குகூட சாலைகள் போட்டு, பல தரைவழி போக்கு வரத்தை தரமான போக்கு வரத்தாக்கி, தனக்கு வாக்குகள் போனாலும் பரவாயில்லைன்னு…. நஷ்டத்திலிருந்து ஆயில் கம்பெனிகளை தூக்கி நிறுத்திவிட்டார்…

அவர் 12 ரூபாய்க்கும், 330ரூபாய்க்கும் ஆயுள் காப்பீடு கொண்டு வந்தால் அவரை சந்தேகிக்கும் நபர்கள் யாரும் அதைவிட பலமடங்கு செலவு வைக்கும் மாநில மருத்துவ ஆயுள்காப்பீடு திட்டங்களை கேள்வியே கேட்பதில்லை… நமக்கு எப்படியாவது அவரை கேள்விகேட்கனும் என்பதை தவிர வேறுதிருப்தி இருப்பதாக தெரியவில்லை…

மதச் சார்பின்மை பேசும் யாரும், பலமாநில ஆட்சியில் செய்யப்படும் போலி மதச்சார்பின்மை பற்றியும், போலி பகுத்தறிவு பற்றியும் பேசுவதே இல்…நமது நாட்டின் மதிப்பு அயல்நாட்டில் பல மடங்கு உயர்ந்திருக்கு. ஆனாலும், நாம உள்நாட்டில் இருந்து அவரது வெளிநாட்டு பயணத்தை கிண்டல்கேலி செய்வோம்…

நாட்டில் தீவிரவாதம் செய்யாதேன்னு அடக்கினா, நாமபாட்டுக்கு தீவிரவாதத்திற்கு வண்ணம் பூசி, காவின்னு சொல்லுவோம், இப்போ சங்கின்னு சொல்லுவோம்… ஆனால், உண்மையான தீவிரவாதத்திற்கு, மோடியின் மேல் குற்றம்சொல்லி அவர் விட்டு கொடுத்து போகலாம்னு அறிவுரை சொல்லுவோம்.

மனைவி, துணைவி இருந்தாகூட தலைவர்னு சொல்லுவோம். அதெல்லாம் அவங்க தனிப்பட்ட உரிமைன்னு சொல்லுவோம். ஆனால், மோடிமனைவியை விட்டது தவறுன்னு நீட்டிமுழக்கி பேசுவோம்…

மோடி அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றாலும், பெறாவிட்டாலும் அவருக்கு எதுவும் நஷ்டம் இல்லை. நல்ல மனிதனை வெற்றிபெற வைப்பதும் கடமைதான். கடமை தவறிவிட்டு, அப்புறம் புலம்புவதில் அர்த்தமில்லை…மக்களுக்கு பலசலுகைகள் கொடுத்து நாட்டை இன்னும் குட்டிசுவராக்கி விட்டு போகலாம்… ஆனாலும் பாருங்க அதை அவர் செய்யவில்லை….

நான் என் கடமையை தவற விரும்பவில்லை. எனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்..

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.