சபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது.

குருவாயூர் கண்ணனை குழந்தையாக பார்ப்பதும், கன்னியாகுமாரி பகவதி அம்மனை குமரியாக பார்ப்பதும் அதன் குறியீட்டு அடிப்படையில் தான் அந்தந்த கோயில்களின் நித்ய பூஜைகளும் இருக்கும்.

கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் அங்கு வருடத்தில் ஓர் நாள் பெண்கள் மட்டுமே பொங்கலிடுவார்கள். இது காலம் காலமான நம்பிக்கை. இக்கோவில் இன்றும் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. அதன் பாரம்பரியத்தில் இன்று வரை எந்த இந்து ஆண்களும் குறுக்கிட்டது இல்லை.

இதுபோல் தான் சபரிமலைகும் கடும் விரதமிருந்து ஆண்கள் மட்டும் சாமி தரிசனம் செய்கிறார்கள். இதுவும் காலம் காலமான நம்பிக்கை. இது இந்து மத கலாச்சாரம். இதில் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை.

ஆனால் சிலர் மொத்தத்தில் இந்தியாவையும் இந்து மதத்தையும் சீர்குலைக்க கோர்ட்டுக்கு சென்று இருக்கிறார்கள். இதன் மூலம் சொல்லப்படுவது யாதெனில் சிதறி கிடக்கும் இந்துக்கள் இதன் மூலம் ஒற்றுமை அடைய இவர்கள் ஒரு தருணம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்…

பெண்களை அனுமதிக்க வேண்டுமெனில் கேரளா அரசாங்கம் இதற்க்கு முன்பே அதை செய்திருக்கும். ஆனால் கேரள பெண்களே அதை ஒத்து கொள்ள மாட்டார்கள். கேரளத்தில் ஆறு தலித்துகளையும், ஏறக்குறைய 30 பிராமணர் அல்லாதோரையும் அர்ச்சர்களாக நியமித்த கேரள அரசுக்கு சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது இயலாத காரியம், அது அக்கோயிலின் அடிப்படை தன்மையை உடைத்து போடுவதே ஆகும் .

இந்து மதத்தில் பெண்களை அவமதிக்கிறார்கள் என்று பதிவு கண்டேன் ,,

சபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம். இதனால் இந்துமதத்தில் பெண்களை அவமதிப்பது என்று அர்த்தம் இல்லை. பெண் தெய்வங்கள் இந்து மதத்தில் அதிகம் ,, அந்த அளவுக்கு பெண்களை நேசிக்கும் மதம் இந்து மதம் பெண்களை தெய்வமாக வணங்கும் மதமும் இந்துமதம் தான்.

சில கோவில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் செல்லும் வழக்கம் உள்ளது எனவே அங்கு ஆண்களை அவமதிப்பதாகிவிடுமா ?

ராஜிவ் காந்தி பிரதமராக இருக்கும் போது திருச்செந்தூர் கோவிலுக்குள் போகும் போது சட்டையை கழற்றினால் தான் உள்ளே செல்ல முடியும் என்று சொல்லப்பட்டது,, அந்த அளவு ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு வழிமுறை உண்டு

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு மற்றும் தனி வழிபாட்டு நடைமுறைகள் உள்ளது அதை மதித்து அதில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் இருப்பதே சிறந்தது.

சிலர் இங்கு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் விரத்தை குறைகூறியுள்ளார்கள். ஆம் சிலர் அப்படித்தான் அலட்சியமாக விரதத்தை கடைபிடிக்காமல் செல்கின்றனர் அதற்கேற்ப அவர்களுக்கு கிடைக்க வேண்டியதும் கிடைக்கிறது. எனவே சபரிமலை ஐயப்பனிடம் உங்கள் விளையாட்டு வேண்டாம்.

நீங்கள் என்ன உத்தரவு போட்டாலும் நல்ல இந்து பெண்கள் அந்த கலாசாரத்தை மீறவே மாட்டார்கள் என்பது உண்மை

பெண்களாகிய எங்களுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு ,, வீட்டில் இருந்து நாங்கள் எந்த கடவுளை மனமார வேண்டினாலும் அந்த கடவுள் எங்களுக்கு அனைத்தையும் செய்வார் அந்த நம்பிக்கை இந்து பெண்களுக்கு உண்டு

இந்து சமயம் என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். தைரியம் இருந்தால் மற்ற சமயங்களில் இருக்கும் நடவடிகைகளை கண்டிக்கட்டுமே ? காலம் மாறுகிறது ஒரு நாள் அனைத்து அரசியல்வாதிகளும் இந்துவை தூக்கி புடித்து கொண்டு அலைவான் ,, இது நடக்கும்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.