ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட இன்று தமிழகத்திற்கு  பல நல்ல திட்டங்கள் வந்து கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் பட்டியலிடாமல் எதிர்மறை கருத்துக்களையே பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்று நீட் தேர்வு எப்படி பாமரர்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்றது என்பதை தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏழை துப்புரவுத் தொழிலாளியின் மகன், டீக்கடை நடத்துபவரின் மகள், மலைவாழ் ஜாதியைச் சார்ந்த துப்புறவு தொழிலாளியின் மகள் என்று பட்டியலிட முடியும். ஆனால் நீட் இல்லாத போது கோடி கோடியாக கொட்டியவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துக் கொண்டிருந்தது.

அன்று தனியார் கல்லூரிகள் பலன்; பெற்றுக் கொண்டிருந்தார்கள். இன்று ஏழை மாணவர்கள்; பலன் பெற்றுக் கொண்டிருக்கிறார்;கள். இதை விரும்பாத ஸ்டாலின் நீட் ஏதோ தமிழகத்திற்கு எதிரானது என்பதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார். நீட் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கிறது. அதுவும் சுப்ரீம் கோர்டின் ஆணையால் என்பதையும், அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போது தான் இதற்காக பிள்ளையார் சுழி போடப்பட்டது என்பதையும் மறந்து இன்று ஸ்டாலின் பேசுகிறார்.

வருமான வரி சோதனைக்கு பயந்து அதிமுக வாக்களித்ததாகக் கூறுகிறார். தமிழகத்திற்கு வரிசையாக கிடைத்து வரும் நன்மைகளை மனதில் கொண்டு அதிமுக, பாஜகவை ஆதரித்துள்ளது என்பது தான் உண்மை.

திமுக கொண்டு வர முடியாத எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. அதை உணர்ந்து வாக்களித்துள்ளார்கள். காமராஜ் காலத்தில் கொண்டு வரப்பட்டது ஆவடி பீரங்கித் தொழிற்சாலை. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் திறமையாளர்களாக இருக்கும் தமிழகத்தை திமுக, காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால் அந்த திறமையைக் கண்டறிந்து 5 லட்சம் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் இராணுவ தளவாடங்களின் தொழிற்சாலை 5 மாவட்;;டங்களில் இரண்டே முக்கால் இலட்சம் கோடியில் வர இருக்கிறது என்பதை உணர்ந்து அதிமுக வாக்களித்திருக்கிறார்கள்.

ஸ்டாலின் அவர்களே! நீங்கள் சொல்வதால் மட்டும் 8 வழிச்சாலை தமிழகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக ஆகி விடாது. பின் தங்கிய திருவண்ணாமலை, தர்மபுரி போன்ற மாவட்டங்களை மேம்படுத்துவதற்காக பத்தாயிரம் கோடி செலவில் மிகப்பெரிய பசுமை வழிச்சாலையை இந்தியாவிலேயே இரண்டாவதாக பெறும் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றதற்காக வாக்களித்துள்ளார்கள்.

உதான் திட்டத்தில் சேலம் போன்ற சிறு நகரங்களுக்கு விமான சேவை கிடைத்திருப்பதற்காக வாக்களித்திருக்கிறார்;கள்.

உதய் திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாய் பலன் தமிழகத்திற்கு கிடைத்திருப்பதற்கும், LED பல்புகளை பயன்படுத்தியதின் மூலம் 17 மாவட்டங்களுக்கு 150 கோடி ரூபாய் மின் கட்டணம் மிச்சமாகியிருப்பதால் வாக்களித்திருக்கிறார்கள். GST வருமானத்தில் அதிக வருமானம் கிடைத்த 4வது மாநிலமாக தமிழகம் இருப்பதால் வாக்களித்திருக்கிறார்கள்.

நீங்கள் மத்தியில் கிடைத்த பதவி சுகத்திற்காக, இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது மவுனமாக இருந்தீர்கள் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். உங்களை ஒரு போதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்;கள். எப்படி இந்திராகாந்திக்கு பயந்து கச்சத்தீவை தாரை வார்த்தீர்கள் என்பதையும் மக்கள் அறிவார்கள். உங்களைத்தான் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

காவிரி; நதிநீர் வழக்கை 1970களில் தங்கள் ஊழல் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்ககூடாது என்ற ஒரே காரணத்தால் காவிரி வழக்கையே முடக்கிப் போட்டு தமிழகத்திற்கு காவிரி பாய்வதை முடிக்கிப் போட்டீர்களே, உங்களைத் தான் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் அதே காவிரியை பாய்ந்தோட வைத்திருக்கிறதே மத்திய அரசு, அதற்காக கூட அதிமுக, பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள். எனவே வருமான வரித்துறையினர் நடவடிக்கையை மத்திய அரசின் நடவடிக்கையாக பொய்யாக முன்னிறுத்தும் உங்கள் தவறான கருத்துக்களுக்காக அல்ல என்பதே உண்மை.

கூட்டணி அமைப்பதற்கும், அவர்களை அச்சுறுத்துவதற்கும் காங்கிரஸ் தான் இத்தகைய வேலையை செய்து கொண்டிருந்தது. கூட்டணி பரிசீலிக்கப்படும் என்று அறிவித்த உடனேயே ஸ்டாலின் வீட்டில் வெளிநாட்டுக்கார் முறைகேடு என்று அடுத்த நாளே வருமான வரித்துறை சோதனை நடத்தியது தங்கள் கூட்டணி காங்கிரஸ் தான். ராஜசேகரரெட்டி, மாயாவதி போன்றவர்களை பயமுறுத்துவதற்கும் காங்கிரஸ் வருமான வரி அஸ்திரத்தை எடுத்தது போன்ற நடவடிக்கையை பாரதிய ஜனதா கட்சி எடுப்பதில்லை. சோதனை நடந்த இடங்களில் எல்லாம் வருமான வரி ஏய்ப்பு நடந்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை என்பதை மக்கள் உணர்வார்;கள்.

ஆக, கச்சத்தீவு, காவிரி உரிமை எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அவர்களின் கூட்டணித் தலைவர் ராகுல்காந்தி கண்டபடி பேசி, கட்டிப்பிடித்தும், கண்ணடித்தும் ஒன்றும் நடக்கவில்லையே. தோல்வியைத் தானே தழுவினோம் என்ற குழப்பத்தில் வெளிவந்திருப்பதே ஸ்டாலினின் அறிக்கை.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை காலூண்ற விட மாட்டோம் என்று சொல்வதற்கான உரிமை திமுகவிற்கு கிடையாது.

2014 பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி இரண்டு இடங்களை பெற்ற போதும், திமுக, காங்கிரசால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை தான் அவர்களுக்குத் தமிழத்தில் மீண்டும் தொடரும் என்பதை நேற்றே புரிந்து கொண்ட ஸ்டாலின், இன்று விரக்தியில் வெளியிட்டிருக்கும் அறிக்கைக்கான பதிலே இது.

என்றும் மக்கள்;; பணியில்

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.