இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களின் சேவையை பிரதமர் நரேந்திரமோடி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை மாலை தொடங்கி வைத்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு மார்ச்சில் பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண் டார். அப்போது இந்தியாவில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையை இலங்கையிலும் அமல் படுத்த உறுதி அளித்தார்.

இதனடிப்படையில், இந்திய அரசுசார்பில் இலங்கைக்கு ரூ.147.81 கோடி (இந்திய மதிப்பு) நிதியுதவியில் 297 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முதல் உதவிநிபுணர்கள் என அந்நாட்டு ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கியது.

இந்த ஆம்புலன்ஸ் சேவை இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் மட்டும் முதற்கட்டமாக பயன்பாட்டுக்கு அந்நாட்டு சுகாதார அமைச்சகம் மூலம் “சுவசெரிய” ஆம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் சேவையின் அழைப்புக்காக 1900 என்ற தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களிடம் பெரும் வரவேற்பை இந்ததிட்டம் பெற்றதால் இலங்கை முழுவதும் சுவசெரிய இலவச ஆம்புலன்ஸ் சேவையை விரிவுப்படுத்த அந்நாட்டு மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதற்காக இந்தியஅரசு இலங்கைக்கு மேலும் 15.02 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 109 கோடி) வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்காக கடந்த மே 31-ம் தேதி கொழும்பு நாடாளுமன்றத் தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தேசியகொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங் கள் அமைச்சர் என்கிற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய நிதி உதவியை பெற்று ஆம்புலன்ஸ் களை இலங்கை முழுவதும் இயக் குவதற்கான ஆவணங்களை சமர்பித்தார். இதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவைக்கான தொடக்கநிகழ்ச்சி அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இலங்கைக்கான இந்தியத் தூதர் தரஜித் சிங் சந்து முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் டெல்லியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்து பேசியதாவது,

இலங்கைக்கு உதவி புரிய முதல் நட்புக்கரம் நீட்டுவதில் இந்தியா பெருமிதம் அடைகிறது. நல்லகாலங்களிலும், கடினமான காலங்களிலும் இலங்கைக்கு துணை நிற்பதில் இந்தியா முதன்மையாக நிற்கும்.

இந்தியாவுக்கு தெற்கு ஆசியாவிலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் சிறந்த மற்றும் நம்பகமான நட்புநாடாக இருப்பது இலங்கைதான். வளர்ச்சிக்கான இரு நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றார்.

இந்திய அரசின் நிதி உதவியுடன் வட மாகாணத்துத்துக்கு 20 ஆம்பு லன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணம் மாவட்டத் துக்கு 7 ஆம்புலன்ஸ்கள், கிளிநொச்சிக்கு 4, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங் களுக்கும் தலா 3 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.