உயி​ரி எரிபொருள்களின் பலன் அனைத்து கிராமங்களையும் சென்றடைய வேண்டும், மக்களிடையே உயிரி எரிபொருளை விளம்பரப்படுத்த அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும். 

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 12 நவீன சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் , உயிரி எரிபொருளை பயன்படுத்தி, விவசாயிகள் வாழ்வில் புதியபுரட்சியை இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும் . எத்தனாலை பயன்படுத்துவது மூலம் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும் ,  வரும் 2022-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் பத்துசதவீதம் எத்தனால் கலக்கவும், 2030-க்குள் 20 சதவீதம் கலக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது .

டெல்லி விஞ்ஞான் பவனில் சர்வதேச உயிரி எரிபொருள் கருத்தரங்கை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.