இந்தியாவில் உள்ள 111 ஆறுகளில் நீர்வழிப்பாதை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள நூற்றுக்கு அதிகமான ஆறுகளில் படகுகள் மூலம் நீர்வழிப் பாதைகளை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இது பற்றி பேசியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “இந்தியாவில் உள்ள 111 ஆறுகளில் நீர்வழிப் பாதையை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்றார். இதன்படி, கங்கையில் வாரணாசி முதல் ஹல்டியா வரை நீர்வழிப் பாதை அமைக்கும் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார். 

நாட்டின் இறக்குமதி 26 சதவீதமாகவும் ஏற்றுமதி 8 சதவீதமாகவும் இருப்பதால், ஏற்றுமதி – இறக்குமதி இடையேயான வேறுபாடு பொருளாதாரத்தில் பிரச்சனைகள் ஏற்படுத்துவதாக நிதின் கட்கரி குறிப்பிட்ட அவர், சரக்குப் போக்குவரத்திற்கான செலவு குறைக்கப்படாமல், ஏற்றுமதியை அதிகரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply