முக்கிய புலனாய்வு வழக்குகளை விசாரித்துவரும், சிபிஐ., அமைப்பு இயக்குனராக, அலோக்வர்மா பதவிவகித்து வந்தார். இவருக்கு அடுத்து, இரண்டாம் நிலையில், சிபிஐ., சிறப்பு இயக்குனராக, ராகேஷ் அஸ்தானா பதவிவகித்தார்.டில்லியைச் சேர்ந்த, மாட்டிறைச்சி ஏற்றுமதியாளன், மொயின் குரேஷி தொடர்பான வழக்கை, அஸ்தானா உத்தரவுப்படி, சி.பி.ஐ.,யில், டிஎஸ்பி., யாக உள்ள தேவேந்திர குமார் விசாரித்தார்.


இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தொழில் அதிபரான, சதீஷ் ஸனாவிடம், சிறப்புஇயக்குனர் அஸ்தானா, 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.இதுகுறித்து,அஸ்தானா கூறுகையில், 'லஞ்சம் தரப்பட்டது உண்மை; அந்த பணத்தை, அலோக் வர்மா தான்வாங்கினார்' என,குற்றஞ்சாட்டினார்.


மேலும், அலோக் வர்மா மீது பல்வேறு ஊழல் புகார்களையும், அஸ்தானா கூறியிருந்தார். லஞ்சம் பெற்றவழக்கில், அஸ்தானா, டி.எஸ்.பி., தேவேந்திர குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சமீபத்தில், தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பாக, தன் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், அஸ்தானா மனுதாக்கல் செய்திருந்தார்.

 


அந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், 'அஸ்தானா மீது, 29ம் தேதி வரை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது' என, உத்தரவு பிறப்பித்தது.அதிகார போட்டியால், அலோக் வர்மாவும், அஸ்தானாவும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி பேசிவந்தது, நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவர் மீதும் எழுந்த ஊழல் குற்றச் சாட்டுகளால், சி.பி.ஐ., அமைப்பு மீது, மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சீர்குலையும் நிலை உருவானது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான, அமைச்சரவையின் நியமன குழு,  இரவு, அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில், பல அதிரடிமுடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி,  ஒரே இரவில், சிபிஐ உயர்மட்ட அதிகாரிகளுக்கு கட்டாயவிடுப்பு அளிக்கப்பட்டது.

அவர்களிடம் இருந்து, அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டன.
சி.பி.ஐ., தற்காலிக இயக்குனராக, இணை இயக்குனர், நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இரவோடு இரவாக, சிபிஐ., இயக்குனர் பொறுப்பை ஏற்ற, நாகேஷ்வர ராவ், பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரித்துவரும், சி.பி.ஐ., விசாரணை குழுவையும், அவர் மாற்றியமைத்தார். விசாரணை அதிகாரி முதல், கண்காணிப்பு குழுக்கள் வரை அனைத்திலும் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளது ,


அஸ்தானா மீதான புகார்களை விசாரிக்க, சி.பி.ஐ., எஸ்.பி.,  சதீஷ் தகார் நியமிக்கப்பட்டு உள்ளார்.நாகேஷ்வர ராவின் அதிரடி நடவடிக்கைகளால், அலோக் வர்மா, அஸ்தானா ஆகியோருக்கு நெருக்கமான, 14 உயரதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, டில்லி, சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில், அலோக் வர்மா, அஸ்தானா ஆகியோரது அலுவலக அறைகள், 'சீல்' வைக்கப்பட்டன.சி.பி.ஐ., வரலாற்றில், இதுவரை நிகழ்ந்திராத வகையில், சி.பி.ஐ., இயக்குனரும், சிறப்பு இயக்குனரும், ஒரே சமயத்தில், ஊழல் புகார் மற்றும் மோதலால், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளது, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது, சிபிஐயின் நேர்மையை நிலைநாட்டவே சிபிஐ இயக்குனர், சிறப்பு இயக்குனருக்கு கட்டாயவிடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

சிபிஐ ஒருபிரதான விசாரணை அமைப்பு. அதன் நேர்மையை பாதுகாப் பதற்காகவும், நியாயமான விசாரணை நடைபெறுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு முன்நிபந்தனை மற்றும் நியாயமான விசாரணைக்கு முற்றிலும் அவசியமானது.

சிபிஐ-யின் இரண்டு உயர் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், நேர்மையாக விசாரணை நடைபெறவேண்டும் என்பதற்காகவே இரண்டு அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு கொடுக்கப் பட்டுள்ளது. இரண்டு உயர் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரிக்கும் என கூறியுள்ளார்.

 

Tags:

Leave a Reply