பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 மற்றும் டீசல்விலை ரூ.2.25 குறைக்கப் பட்டது. அதே சமயத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல்மீதான உற்பத்திவரியை லிட்டருக்கு 2ரூபாய் அதிகரித்துள்ளது. இது நள்ளிரவுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைநிலவரத்துக்கு ஏற்ப, மற்றும் மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தத்தின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது.

இதன்படி, சென்னையில் இது வரை 63 ரூபாய் 94 பைசாவுக்கு விற்கப்பட்ட ஒருலிட்டர் பெட்ரோல், வெள்ளிக் கிழமை நள்ளிரவு முதல் 2 ரூபாய் 56 காசுகள் குறைந்து இனி 61ரூபாய் 38 பைசாவுக்கு விற்பனையாகும். டெல்லியில் பெட்ரோல்விலை லிட்டருக்கு 58 ரூபாய் 91பைசாவாக இருக்கும். அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 48 ரூபாய் 26 பைசாவாக இருக்கும்.

இதே போல் 53 ரூபாய் 78 பைசாவிற்கு விற்கப்பட்ட ஒருலிட்டர் டீசல், 2 ரூபாய் 44 காசுகள் குறைந்து இனி 51 ரூபாய் 34 பைசாவிற்கு விற்பனையாகும் என பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் முதல் பெட்ரோல் விலைகள் 9வது முறையாக குறைக்கப் பட்டுள்ளது. டீசல்விலை 5-வது முறையாக குறைக்கப் பட்டுள்ளது. இன்றைய விலைக் குறைப்பின் மூலம் ஆகஸ்ட் முதல் மொத்தமாக பெட்ரோல்விலை லிட்டருக்கு ரூ.14.69 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் விலையும் இதுவரை மொத்தத்தில் லிட்டருக்கு ரூ.10.71 குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply