1931 மார்ச் 23 ஆம் தேதியன்ற காந்திஜி டெல்லியில் உள்ள டாக்டர் எம்.ஏ. அன்சாரியின் வீட்டில் தங்கியிருந்தார். அன்று அர் மௌன விரதம். அப்போது மதன்மோகன் மாளவியாவும், நேருஜியும் அங்க வந்தார்கள்.

மாளவியா கலக்கத்தோடு "காந்திஜி இன்று மாலையில் பகத் சிங்கையும், அவரது தோழர்களையும் தூக்கிலிடப்

போகிறார்களாம். இனியும் நாம் தாமதிப்பதற்கில்லை. நானும், நீங்களும், பட்டேலும், நேருவும் கையெழுத்திட்டு இங்கிலாந்து தந்தி அனுப்பலாம். உடனே புறப்பட்டுச் சென்று கவர்னர் ஜெனரலைப் பார்த்து தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சேரலாம். புறப்படுங்கள்" என்றார்.

உடனே காந்திஜி ஒரு பேப்பரில் எழுதி காட்டினார். "நான் செய்யக்கூடியதை எல்லாம் முன்பே செய்து விட்டேன். இனிமேல் ஒன்றுமில்லை. ஆண்டவன் விட்ட வழி" என்று எழுதியிருந்தது.

இதைப் பார்த்தவுடன் நேருஜிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற காந்திஜிக்கு மாணவர்களும், இளைஞர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி காட்டினர்.

கராச்சி காங்கிரஸ் மகாசபை நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு.

அரசியலில் பலாத்காரம் கூடாது. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் சேவைகளுக்கு நன்றி செலுத்தி அவர்களது மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் காங்கிரசால் அவர்களின் தீவிரச் செயலை அங்கீகரிக்க முடியவில்லை. அந்தத் தீர்மானத்தை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடுமையாக பேசினார்.

காங்கிரசின் தீர்மானம் எதுவாக இருக்கட்டும், ஆனால் இந்த மாநாட்டுப் பந்தலில் வீற்றிருக்கிற எந்தத் தியாகிகளுக்கும், எந்தத் தலைவர்களுக்கும் அணுவளவும் குறைந்ததல்ல பகத்சிங், சுகதேவ், ராஜகுருவின் தியாகமும் தேசபக்தியும் அவர்களின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, அவர்களது செயலை அங்கீகரிக்க மறுப்பது என்னால் புரிந்து கொள்ளவில்லை.

காந்திஜி அவர்களே….. நீங்கள் ஒரு பெரிய மகான் என ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பகத்சிங் விஷயத்தில் நீங்கள் நடந்து கொண்ட விதத்தை எங்களல் ஜீரணிக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.