பெரும்பாலான நாடுகள், அன்னியச் செலாவணியின் மதிப்பை குறைத்தல், ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடும் போட்டியில் இறங்கின. இதனால் வணிக தொடர்புகளில் சிக்கல் ஏற்பட்டு சர்வதேச வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இது இரண்டாம் உலகப் போரின்போது உச்ச நிலையை அடைந்தது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பன்னாட்டு நாணயத்தை

உருவாக்குதல், நாணய மாற்று விகிதத்தை நிலையாக நிர்ண யித்தல், உலக அளவில் நெருக்கடி ஏற்படும்போது, பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக பன்னாட்டு பண நிதியம் 1945 டிசம்பரில் உருவாக்கப்பட்டது. இந்த நிதியம் 1947 மார்ச்சில் தனது பணிகளை தொடங்கியது. முதலில் இந்தியா உள்ளிட்ட 40 உறுப்பினர் நாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்த நிதியத்தில் தற்போது 187 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

பன்னாட்டு பண நிதியத்திற்கான மூலதனம் எவ்வாறு திரட்டப்படுகிறது?

பன்னாட்டு நிதியத்திற்கான மூலதனத்தை உறுப்பு நாடுகள் பங்குத்தொகைகளாக (கோட்டா) அளிக்கின்றன. ஒவ்வொரு நாடும் கொடுக்க வேண்டிய பங்கின் அளவு அந்நாட்டின் வருவாய், பன்னாட்டு வர்த்தகத்தில் அந்நாட்டின் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாடும் அதன் பங்களிப்பில் 25 சதவீதத்தை தங்கம் மற்றும் அமெரிக்க டாலர், ïரோ, பவுண்டு யென் போன்ற செலாவணிகளில் செலுத்த வேண்டும். எஞ்சியுள்ள 75 சதவீதத்தை அந்தந்தநாட்டு செலாவணிகளில் செலுத்தலாம்.

பன்னாட்டு பண நிதியம் 880 கோடி டாலர் மூலதனத்தில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த மூலதனம் 76,700 கோடி டாலராக உள்ளது. மேலும் இந்த நிதியத்திடம் 2,814 டன் தங்கம் உள்ளது. இந்த தங்கத்தை இந்த நிதியம் விற்பனை செய்யலாம். எனினும் இதற்கு தங்கம் வாங்க அனுமதி இல்லை.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.