கன்னியாகுமரி: சட்டசபைதேர்தலிலும் அத்தனை கட்சிகளும் தனி தனி யாக போட்டியிட்டிருக்க வேண்டும். அப்படிநடந்திருந்தால், தேமுதி கவுக்கு ஒரு சீட் கூட கிடைதிருக்காது. ஆனால் எங்களுக்கு 6சீட் கிடைத்திருக்கும் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சிதேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டுவென்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுவிழா நடந்தது.

அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பா ஜ க வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. அதன் பயணம்_தமிழகத்தில் ஆளும் கட்சியாகவேண்டும். இதுமுடியுமா? முடியாதா? நடக்குமா, நடக்காதா? என எண்ணிக்கொண்டிருக்க கூடாது.

இந்தஉள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக நின்றதால் 3கட்சிகள் லாபம் அடைந்திருக்கிறது. ஒன்று அதிமுக.,, இரணடாவது மதிமுக., மூன்றாவது பா,.ஜனதா.

உள்ளாட்சி தேர்தலைபோல அனைத்து கட்சிகளும் சட்டமன்றதேர்தலையும் சந்தித்திருக்க வேண்டும். அப்படி தனி தனியாக போட்டி யிட்டிருந்தால் தேமுதிக.வுக்கு ஒரு இடம்கூட கிடைத்திருக்காது. பாஜக பெற்ற ஓட்டுவிகிதத்தை பார்த்தால் ஆறுஇடம் கிடைத்திருக்கும்.

இந்தநிலை மேலும் வளரும், பாரதிய ஜனதா ஆளும் கட்சியாக மாறும் என்றார் பொன் ராதாகிருஷ்ணன்

Tags:

Leave a Reply