கடந்த 1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்த நாளை கொண்டாடும் விதமாக , அவரது நினைவாக டெல்லியில் அம்பேத்கர் சர்வதேசமையம் அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்படிருந்தது .

இருப்பினும் கடந்த 25ந்து வருடமாக காலம்தான் கழிந்ததே தவிர, தொடர்புடைய அனைத்து ஆவணகளும் அசைவற்று அப்படியேதான் கிடந்தன. இந்நிலையில் மோடி தலைமையிலான பாஜக அரசு உறங்கி கொண்டிருந்த இந்த திட்டத்துக்கு உயிர் கொடுக்கும் விதமாக வரும் 31ம் தேதி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறது.

இத்திட்டத்தின் படி 'தலைநகர் டில்லியில், அம்பேத்கர் சர்வதேச மையம் அமைக்க படுகிறது . இதில், அம்பேத்கர் பெயரில், தேசிய அளவிலான ஒருநுாலகம் இடம் பெறுவதோடு, அதில், முழுவளவிலான கட்டமைப்பு வசதிகளும் இடம் பெறுகிறது

Leave a Reply