நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணைய தள சேவையை வழங்கும் விதத்தில் 70 ஆயிரம் கோடி செலவில் ஒப்டிகல் பைபர் இணைப்பு வழங்கும்பணியை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்தப் பணியை விரைந்துமுடித்து கிராமப்புற மக்களுக்கும் இணையதள சேவையை விரிவுபடுத்த மத்திய தொலை தொடர் புத் துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களாக 3 திட்டங்களை குறிப்பிடலாம். சுவாச்பாரத் எனப்படும் தூய்மை இந்தியா டிஜிட்டல் இந்தியா எனப்படும். இந்தியா முழுவதும் கணனிமயம் மற்றும் மேக் இன் இந்தியா எனப்படும், இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பது ஆகியவையே அவை.

இதில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொறுப்பு தகவல் தொடர்பு துறை அமைச்சரான பா.ஜ.கவைச் சேர்ந்த ரவிசங்கர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையால் கிராமப்புறங்களுக்கு, ஆமைவேகத்தில் நடைபெற்று வந்த,பைபர் ஒப்டிகல் நெட்வெர்க் அமைப்புபணிகள் அசுரவேகத்தில் நடைபெற உள்ளன.

ஆண்டுக்கு இரண்டு இலட்சம் கி.மீ.க்கு அமைக்கப்பட்டு வரும் பைபர் ஒப்டிகல் நெட்வெர்க் வேகம் ஆண்டுக்கு பத்து இலட்சம் கி.மீ. ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சாதாரண தொலைபேசி இணைப்பு நாடு முழுவதும் இருந்தாலும் பைபர் ஒப்டிகல் நெட்வெர்க் இருந்தால்தான் இணையதள வசதிகளை அதிவேகத்தில் பெறமுடியும்.

இதற்கு அதிக நிதிசெலவாகும் என்பதால் முதற்கட்டமாக 70 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி கிராம மக்கள் அனைவருக்கும் இணைய தள சேவைகள் அதன் பலன்கள் கிடைக்கவேண்டும் என கட்டாயமாக வலியுறுத்தியுள்ளார்.

இப்போதைய நிலையில் நாட்டின் மக்கள்தொகை 125 கோடியாக உள்ளது. அதில் 110 கோடி பேருக்கு அதிவேக இணையதள வசதி இல்லை. இது உலகிலேயே இணையதளவசதி இல்லாத அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இக்குறையை போக்கவேண்டும் என முடிவு செய்துள்ள அமைச் சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த 30 ஆண்டுகளாக பத்து இலட்சம் கி.மீ.க்கு தான் பைபர்ஒப்டிகல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் முழுமையடையும் போது நாடு முழுவதும் உள்ள 2.5 இலட்சம் கிராமங்கள் அதிவேக இணையதள வசதி வழங்கும் பைபர் ஒப்டிகல் நெட்வெர்க்கில் பின்னப்பட்டிருக்கும் இந்த திட்டத்தை அரச துறைகள் மட்டும் செயல்படுத்தினால் காலதாமதம் ஆகும் என்பதால் தனியார் துறைக்கும் அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

Leave a Reply