கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தால் மத்திய அரசு 25 பைசாகளை ஒழித்துள்ளது என குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடி நகைச்சுவையாக பேசியுள்ளார் .

மோடி பேசியதாவது :ஆயிரம் ரூபாய்-நோட்டுக்களை புழக்கத்திலிருந்து அகற்ற வேண்டும் என யோகா-குரு பாபாராம்தேவ்

போராடி வருகிறார். கறுப்புப்பணத்தை ஒழிக்க இதுதான் ஒரேவழி. அவரது கோரிக்கைக்கு-பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

ஆனால், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கலை ஒழிப்பதற்கு பதிலாக 25 பைசா சில்லறை-நாணயங்களை மத்திய அரசு ஒழித்துள்ளது. கறுப்புப்பணத்தை ஒழிக்க மத்தியஅரசு எடுக்கும் “கடுமையான நடவடிக்கை” இதுதானா?

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைவிட மிகச்சிறந்த நிர்வாகத்தை ஆமதாபாத் மேயரால் தர முடியும்.ஒரே இரவில், குஜராத்மாநிலத்தின் நியாய விலை-கடைகளுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டின் அளவை மத்திய-அரசு குறைதுள்ளது. குஜராத்மக்கள் இந்தியர்கள் கிடையாதா? என்று நரேந்திர மோடி பேசினார்.

Tags:

Leave a Reply