பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று வருகிற 26ம் தேதியுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. இதையொட்டி முதலாண்டு ஆட்சிநிறைவு விழாவை நாடெங்கும் பிரம்மாண்டமாக கொண்டாட பாஜக தலைவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

கடந்த ஓராண்டில் பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை நாட்டுமக்களிடம் எடுத்து கூற திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுமாறு பாஜக எம்பி.க்கள், எம்எல்ஏ.,க்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது.

அந்தவகையில் மட்டும் 500 பிரஸ் கான்பரன்சுகள் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இது தவிர நாடெங்கும் 250 நகரங்களில் 25ம் தேதி சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. மதுராவில் 25ம் தேதி நடக்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்கள் நடத்துவது குறித்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல இணைய தளங்களில் பாஜக அரசின் ஓராண்டு சாதனைகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய மந்திரிகளின் துறை வாரியான சாதனை அம்சங்களை தொகுத்து வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply