அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்தியாவில் பால் உற்பத்தி 54 சதவீதம் அதிகரித்து 12.30 கோடி டன்னிலிருந்து 19 கோடி டன்னாக உயரும் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பால்உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதம் வளர்ச்சி அடையும் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. உலக பால் உற்பத்தியில் நம் நாட்டின் பங்களிப்பு 20 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் பாலில் பெரும் பகுதி உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் உற்பத்தியாகும் பாலில் 60 சதவீதம் திரவ வடிவிலும், 40 சதவீதம் வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட திட வடிவிலும் பயன்படுத்தப்படுகிறது.

சென்ற ஓர் ஆண்டு காலத்தில், பால் விலை 10.74 சதவீதம் உயர்ந்துள்ளது. குளிர்பதன கிடங்குகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவிற்கு இல்லாதது, பால் விலையை நிர்ணயிப்பதில் வெளிப்படையான அணுகுமுறை கடைபிடிக்கப்படாமை போன்ற காரணங்களால் பால் விலை அதிகரித்து வருகிறது என ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

Tags:

Leave a Reply