நிலக்கரி சுரங்கஒதுக்கீடு தொடர்பான 257 கோப்புகள் சம்பந்தப்பட்ட அமைச்சக அலுவலகத்தில் இருந்து மாயமானதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்க முடிவுசெய்துள்ளது.

நிலக்கரிவளம் கொண்ட மாநிலங்களில் சுரங்கம்வெட்ட பல தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டது. இதில் பல தவறுகள் நடந்திருப்பதாக சிஏஜி குற்றம் சாட்டியது. நிலக்கரிசுரங்கத்தை ஏலம் விட்டிருந்தால் ரூ. 1.82 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும் என குற்றம்சாட்டியது. மத்திய அமைச்சராக இருந்த சிபுசோரன் ராஜினாமாவை தொடர்ந்து நிலக்கரிதுறை கடந்த 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பிரதமர் பொறுப்பில் இருந்தது. இந்த கால கட்டத்திலும் சில சுரங்க உரிமைகள் தனியாருக்குகொடுக்கப்பட்டது. இதனால் இந்த ஊழலில் பிரதமருக்கும் பொறுப்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கிடையில் நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சி,பி,ஐ விசாரணை நடத்திவருகிறது. இது சம்பந்தப்பட்ட சில கோப்புகளை வழங்குமாறு மத்திய நிலக்கரிதுறை அமைச்சகத்துக்கு சிபிஐ கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் அமைச்சகத்திலிருந்து பலகோப்புகள் மாயமானது. இந்தப் பிரச்னை கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தை உலுக்கிவருகிறது. இந்நிலையில் 257 கோப்புகள் மாயமானது சிபிஐ விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளது. நிலக்கரி அமைச்சகத்திடமிருந்து முறையான புகார்வந்தவுடன் விசாரணை தொடங்கப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply