மத்தியில் நம்; நல்லாட்சி அமைந்து ஒரு வருட காலம் நிறைவடைந்திருக்கிறது. மக்களின் வாழ்வும் மலரத் தொடங்கியுள்ளது. 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, ஒரு வருட நம் ஆட்சி, 10 ஆண்டுகளில் சரிவடைந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதில் ஆரம்பித்து பல சவால்களைச் சந்தித்து வருகிறது. இதுவரை பாராளுமன்றம் இந்த அளவிற்கு பயனுள்ளதாக நடந்ததில்லை என்று சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறோம். பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு காப்பீட்டுத் திட்டம் போன்ற பல நல்ல மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பெண்குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத்திட்டம்;, அடிதட்டுமக்களுக்கான முத்ரா வங்கித் திட்டம் போன்ற திட்டங்கள், இன்னும் பல பல. இந்த நல்ல திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கானது தான். அந்த மக்களே இந்த ஒரு வருட ஆட்சியைக் கொண்டாட வேண்டும். நாமும் அவர்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும்.

மே 26-ந்தேதி நாம் ஆட்சி அமைத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள். அதனை கொண்டாடி மகிழ்வோம.; சென்னையில் நம் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காலை 10 மணிக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டம் நடக்க இருக்கிறது. அதில் அனைவரும் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

மே 27-ந்தேதி மாலை மத்திய சென்னையில் தூய்மை இந்தியா பிரச்சார வாகனம் பயணம் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

மே 29-ந்தேதி சென்னையில் மத்திய அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் கலந்து கொள்ளும் மத்திய அரசு சாதனை விளக்கக் கூட்டம் நடை பெறும். அதைத் தொடர்ந்து ஜூன் 6-ம் தேதி வரை 100 பொதுக் கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இப்படி நம் வெற்றி விழாவை கொண்டாடத் தயாராவோம். நம் தொண்டர்களும், மக்களோடு மக்களாக திரு. நரேந்திர மோடி அவர்களின் சாதனை ஆட்சியை மகிழ்வோடு கொண்டாட வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்
(டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply