வரும் 26ம் தேதி அகமதாபாத்தில் முதல்வராக நரேந்திரமோடி பதவி ஏற்க்கிறார் வரும் 26ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் விழாவில் குஜராத் மாநில முதல்வராக நரேந்திரமோடி மீண்டும் பதவி ஏற்க்கிறார். குஜராத் சட்ட பேரவை தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 115ல் வெற்றிபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் புதிய எம்எல்ஏ.க்கள் கூட்டம் அகமதாபாத்தில் வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. இதில் சட்டப் பேரவை பாரதிய ஜனதா கட்சித் தலைவராக நரேந்திரமோடி மீண்டும் தேர்வு செய்யப் படுகிறார். இதன் பிறகு கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

மோடியின் தலைமையிலான புதிய அமைச்சரவை வரும் 26ம்_தேதி பதவி ஏற்க இருப்பதாக குஜராத் பாரதிய ஜனதா செய்திதொடர்பாளர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார் . அகமதாபாத்தில் இருக்கும் சர்தார்படேல் மைதானத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply