2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றவுடன் இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ’தூய்மை இந்தியா’ திட்டத்தை உருவாக்கி நாடுமுழுவதும் செயல்படுத்தினார்.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்று உள்ள நரேந்திரமோடி அரசு அனைவருக்கும் சுத்தமான குடி தண்ணீர் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்காக ’ஜல் ஜீவன்’ மிஷன் தொடங்கப்பட்டுள்ளது.

ஜூலை 5-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது முதல் பட்ஜெட்டில் ‘ஜல் ஜீவன்’ திட்டம் அமைச்சரவை ஒப்புதலுக்கு தயாராக உள்ளது என அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திரமோடி இன்று 73-வது சுந்தந்திர தின உரையில் கூறும்போது,

நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்காகவும் நதிகள்,குளங்களை தூர்வாரவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருவள்ளுவர் என்ற மகான்தான் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி யாரும் சிந்திக்காத காலத்திலேயே சிந்தித்து ’நீரின்றி அமையாது உலகு’ என்று கூறினார்.

பல வருடங்களுக்கு முன்பே, ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக்கொண்டு இருக்கிறது.

நீர் பிரச்சினையை தீர்க்க ’ஜல் ஜீவன் மிஷன்’ என்ற புதியதிட்டத்தை அறிவிக்கிறேன். ’ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்திற்கு போதிய நிதியும் ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர ஜல் ஜீவன் மிஷனுக்கு ரூ .3.5 லட்சம் கோடியை மோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தண்ணீரின் அவசியம் குறித்து இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் வறுமை ஒழிக்கப்படவேண்டும் . வறுமையில் உள்ளவர்களே சவால்களை சமாளிக்கும் வழிகளை அறிந்தவர்கள். இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகளில் வசிக்கும்மக்கள், நீண்டதூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலைதான் உள்ளது என மோடி கூறினார்.

Comments are closed.