ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் கூடுதல் இருப்புத்தொகையை அரசிடம் தரப்போவதாக சொல்கிறது! இருப்புத்தொகை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருக்கவேண்டும்! அந்த அளவையும் தாண்டி கூடுதலாக இருப்பதுதான் கூடுதல் இருப்புத்தொகை 1.76 லட்சம் கோடி! இந்த தொகை ரிசர்வ் வங்கி ஈட்டிய லாபம் என்று சொல்லலாம்!

ரிசர்வ் வங்கி, பாஜக அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து வட்டி விகிதங்களை பெருமளவு குறைத்தது! எனினும் லாபம் அதிகமாக ஈட்டியுள்ளது! லாபம் அதிகமாக ஈட்டியுள்ளது என்றால், நாட்டில் தொழில் வளமும் உற்பத்தியும் வியாபாரமும் பண புழக்கமும் சிறப்பாக இருக்கிறது என்றுதான் பொருள்! கூடுதல் இருப்புத்தொகை இருக்கிறது, அது வங்கிக்கு தேவையற்றதாக, அதிக இருப்பாக இருக்கிறது! அதை நாங்கள் அரசுக்கு தந்துவிடுகிறோம் என்கிறது ரிசர்வ் வங்கி!

இந்த தொகையை தாருங்கள் என்று அரசு கேட்கவில்லை! வங்கிதான் ஒரு குழுவைப் போட்டு ஆய்வு நடத்தி இவ்வளவு தொகை அதிகமாக இருப்பதை அரசிடம் தந்துவிடலாம் என முடிவெடுத்திருக்கிறது!

அரசு இந்த ரிசர்வங்கியின் முடிவுக்கு பதில் எதுவும் இதுவரை சொல்லவில்லை!

அரசு இந்த தொகையை ஏற்கலாம், அல்லது அது வங்கியிடமே இருக்கட்டும், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லலாம்!

ஆனால், இந்திய அரசின் சார்பில் பிச்சைவாங்கி உலகெங்கும் சுற்றித்திரிந்த காங்கிரஸ் காரர்கள், கடனே வாங்காமல் ஆட்சி நடத்தும் பாஜக அரசைப் பார்த்து, ரிசர்வ் வங்கியில் திருடுகிறார்கள்! என்கிறது!

ஒவ்வொரு வங்கியாக திருடிய காங்கிரஸ் கூட்டத்திற்கு அந்த “திருடி” என்ற வார்த்தைத்தான் வாயில் வரும்!

காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, உலகெங்கும் கடன் வாங்கினார்கள்! பாஜக கடனே வாங்கவில்லை!

காங்கிரஸ் காரர்கள் ஆட்சியில் இருந்தபோது அனைத்து வங்கிகளிலும் நிதி மோசடி செய்தார்கள்! பாஜக ஊழலற்ற ஆட்சி நடத்துகிறது!

காங்கிரசின் நிதி அமைச்சர் தனது வீட்டுக்காக பணம் திருடிய வழக்கை சந்தித்துக்கொண்டிருக்கிறார்!

அதிகமாக இருக்கும் இருப்புத்தொகையை ரிசர்வங்கி அரசிடம் கொடுக்காமல் தங்களிடம் கொடுக்கவேண்டும் என்றா காங்கிரஸ் காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்? அல்லது ஆற்றில் போட வேண்டுமா?

ரிசர்வ் வங்கி லாபமாக ஈட்டியிருப்பதாக சொல்லும் அதிக இருப்பு வெறும் 1.76 லட்சம் கோடிதான்! ஆனால் ஏழை இந்தியர்களுக்கு தொழில் துவங்க வியாபாரம் செய்ய பாஜக அரசு ஜாமீனோ அடமானமோ இல்லாத முத்ரா வங்கி கடனுக்காக மட்டும், கடந்த 5 ஆண்டுகளாக 7 லட்சம் கோடியை ஒதுக்கியிருக்கிறது! 15 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளார்கள்! தமிழகத்தில் மட்டும் ஒரு கோடியே அறுபது லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயனடைந்துள்ளார்கள்!

7 லட்சம் கோடி! 10 லட்சம் கோடி! 15 லட்சம் கோடி! என மக்கள் நலனுக்காக செலவு செய்துக்கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசுக்கு, இந்த ரிசர்வ் வங்கி தருவதாக சொல்லும் 1.67 லட்சம் கோடி ரூபாய் மிக சிறிய அளவே!

நாடுகள் தோறும் பிச்சை எடுத்து நாட்டை கடன்கார நாடாக மாற்றிய காங்கிரஸ் கட்சிக்கு, இதில் கருத்து சொல்ல அருகதையே இல்லை!

நன்றி – குமரிகிருஷ்ணன்

Comments are closed.