நாடுமுழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ்ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: –

நாடு முழுவதும் வரும் 2021-22 ஆம் ஆண்டிற்குள் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் துவங்குவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும்.

மருத்துவ வசதி குறைவாக உள்ள மாவட்டங்களில் மருத்துவகல்லூரிகள் அமைக்கப்படும். நிலக்கரி சுரங்கம் மற்றும் அது தொடர்பான நடைமுறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிவழங்கப்படும்.

உபரியாக உள்ள 60 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதிசெய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் பேரிடர் தடுப்பு உள் கட்டமைப்புக்கான சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மை உள்ள கட்டமைப்பை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல்வழங்கி உள்ளது.

சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நியூயார்க் நகரில் வரும் செப்.,23ம் தேதி நடைபெறும் ஐ.நா.,வின் பருவகால மாநாட்டை பிரதமர் மோடி துவக்கிவைப்பார் என கூறினார்.

 

Comments are closed.