இந்தியாவில், கல்வியறிவு குறைவால் ஆண்டுக்குரூ.2.65 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாக ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கிறது .

எழுத்தறிவின்மையால் ஏற்படும் சமூக, பொருளாதார இழப்பு’ என்ற தலைப்பில் உலக கல்வி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எழுத்தறிவின்மையால் அதிக இழப்பை கண்டு வரும் நாடுகளின் பட்டியலில் சீனா (13,560 கோடி டாலர்), ரஷ்யா (2,848 கோடி டாலர்) மற்றும் பிரேசில் (2,741 கோடி டாலர்) ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

ஒரு மருந்து சீட்டை படிக்கவோ அல்லது ஒரு வேலைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவோ இயலாத அளவிற்கு எழுதப் படிக்க தெரியாதவர்கள் உலக அளவில் 80 கோடி பேர் உள்ளதாகவும், இவர்களால் உலகப் பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு ரூ.59.50 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply