பாட்னா தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி தங்கியிருந்த ராஞ்சிஹோட்டலில் 27 வெடிகுண்டுகளை தேசிய புலனாய்வுபிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பீகார் தலைநகர் பாட்னாவில் சென்ற மாதம் 27-ந்தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பொதுக்கூட்டம் நடைபெற இருந்த காந்திமைதானத்தில் பயங்கர குண்டுகள்வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினர்.

இந்நிலையில் பாட்னா குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹைதர்அலி தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநில தலை நகர் ராஞ்சியில் ஹோட்டலில் தேசியபுலனாய்வு பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது 27 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ராஞ்சியில் இரண்டுபேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை அவர்கள் கைது செய்யப் படவில்லை.

Leave a Reply