லோக் சபாவை நடத்தவிடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த காங்கிரஸ்., எம். பி.,க்கள் 27 பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர்.கடந்த 21 ம் தேதி முதல் துவங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒரு நாள்கூட முறையான அலுவல் நடக்கவில்லை. இன்றும் காலை முதல் சுஷ்மா விவகாரத்தை கிளப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். அவை ஒத்திவைப்பதும், மீண்டும் துவங்குவதுமாக இருந்தது.

இதனையடுத்து சபா நாயகர் சுமித்ரா மகாஜன் கடுமையாக எச்சரித்தார். தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை அருகேசென்று முற்றுகையிட்டனர். இதனையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் 27 பேரை பாராளுமன்ற நடவடிக்கையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு 5 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply