காலுக்குச் செருப்பில்லை என்று கவலைப்பட்டேன் .காலே இல்லாதவனைப் பார்க்கும் வரை என்பது ஒரு பழமொழி . பொருளாதார விஷயத்தில் நம்மைவிடக் குறைந்தவர்களோடு ஒப்பிட்டுத் திருப்தி அடைய வேண்டும் . அறம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உயர்ந்தவரோடு ஒப்பிட்டு நாமும் நம்மை உயர்த்த வேண்டும் . காமம் விஷயத்தில் சமமானவரோடு ஒப்பிட வேண்டும்.

நாம் நேர்மாறாகச் செய்கிறோம்.கடந்த கால நினைவுகள் என்பது கடன் கொடுத்தவர் எழுதிக்கொடுத்த 'புரோநோட் 'மாதிரி . எதிர்காலத் திட்டங்கள் வகுத்து எதிர்காலத்தையே எண்ணுவது என்பது பின் தேதியிட்ட செக் மாதிரி. நிகழ் காலம் என்பது கையிலுள்ள கரன்சி .
மாதிரி. புரோநோட்டாலும், பின்தேதி இட்ட 'செக் கினாலும் தற்சமயத்துக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. கையிலுள்ள ரூபாய் நோட்டுகள் இப்போது பயன்படும்.அதை போல் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு கடந்த காலத்தாலும் எதிர்காலத்தலும் எதையும் பெற முடியும். நிகழ்காலத்தில் மட்டுமே பூரணமாக வாழ்தலைப் பெற முடியும்.
"என்னால் எதுவும் முடியாது "இது கோழைத்தனம்."என்னால் எல்லாமே முடியும் "இது அகங்காரமான முட்டாள்தனம். எது என்னால் முடியவேண்டுமோ, அதனை முடிக்க என்னால் முடியும்.கடவுல்கருணை இருந்தால்"என்பதே சரியான வாழ்க்கைப் பாதை.

ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் இன்பமும் துன்பமும் .துன்பம் என்பது வாழ்வின் ஒரு நிலை …ஒரு நிகழ்ச்சி ..ஒரு நேர கட்டாயம் ..விதிப்படியும் இயற்கை நியதிபடியும் நடந்தாக வேண்டிய நடப்பு. அந்த கஷ்டங்களை எதிர்கொள்வதும் வெல்வதும் தான் வாழ்வின் சுவை. சுகம், சுவாரசியம், சவால்கள், வாழ்கையே வளபடுதும் வழிவகைகள்.

புதியனவற்றை வரவேற்கும் போதே சில பழமைக்கும் விடை கொடுப்போம். ஆரோக்கியம் என்பது எது ? உடம்பில் உள்ள கழிவுகள் முறையாக வெளியேறினால் நம்மிடம் தங்குவது ஆரோக்கியம் எனவே நமது வாழ்க்கை அர்ரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பழைய கழிவுகளை,நச்சு எண்ணங்களை,தவறான பழக்கம் எனக்கிர மாசுகளைப் புத்தாண்டுதோரும் நீக்கிக்கொள்ள வேண்டும்.

எந்த வாழ்க்கையை பெறுவதற்காக நீங்கள் பணத்தைத் தேடி உங்கள் குழந்தையையும்  புறக்கணித்து விட்டு ஒடுகிறீர்களோ, அந்த வாழ்க்கையை விட்டே நீங்கள் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் பெரும் புள்ளியாகும் போது வாழ்க்கை உங்களுக்கு வெகு தூரத்தில் சிறு புள்ளியை மறைந்து கொண்டிருப்பதை
காண்பீர்கள். நான் உரக்கச் சொல்கிறேன் ஒரு போதும் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுப் பணத்தைத் தேடாதீர்கள் அவசியம் என்றால் பணத்தைத் தொலைத்தாவது வாழ்க்கையைப் பெறுங்கள்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.