வேதம் மொத்தத்தையும் யாரும் கற்றுக்கொண்டு விட முடியாது. வேதங்கள் அனந்தம். பரத்வாஜ மஹரிஷி மிக இளமையிலேயே வேதம் கற்க ஆரம்பித்தார். 96 வயசு ஆகிவிட்டது. ஆனால் முழுக்க கற்றுக்கொண்டு முடிந்தபாடில்லை. எனவே இந்திரனை நோக்கித் தவமிருந்தார். அவன் அவர் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்டான். இன்னும் நூறு வயது வரை வாழ ஆயுள் வேண்டும்

என்றார். இந்திரனும் வரமளித்துப் போனான். அந்த ஆயுளும் 96 ஆண்டுகள் முடிந்தது. ஆனாலும் வேதத்தை முழுதும் கற்க முடியவில்லை. பரத்வாஜரால் மறுபடியும் தபஸ் மறுபடியும் வரம் என்று மூன்று நூறு வருடங்கள் கடந்தன. நான்காவது முறை அவர் மீண்டும் வரம் கேட்டு விடுவாரே என்று அஞ்சி இந்திரன் அவர் தவத்தைத் தொடங்கும் முன்பே பிரத்யட்சமாகிவிட்டான்.

உமக்கு நான்காவது ஆயுளைக் கொடுத்தால் அதைக் கொண்டு என்ன செய்வதாக இருக்கிறீர்? என்று பரத்வாஜரைக் கேட்டான் இந்திரன். என்ன கேட்கிறாய் இந்திரா நீ பிரம்மச்சார்யம் அனுஷ்டித்து வேதம் பயில்வதைத் தவிர வேறு காரியம் எனக்கு இல்லை என்றார்.

உடனே இந்திரன் பூ புவ சுவ என்று மூன்று மலைகளான வேதங்களைக் கற்று விட்டதாக நினைத்து இந்திரா இது மொத்தமும் எனக்கு வந்துவிட்டதா என்றார். உமக்கு வந்ததைக் காட்டட்டுமா என்றான் இந்திரன். ஒவ்வொரு மலையிலிருந்தும் ஒரு பிடி மண்ணை எடுத்துப் போட்டு முந்நூறு வருஷ காலத்திலே அத்யயனம் பண்ணினது இந்த மூன்று கைப்பிடி. இன்னும் எத்தனை நூறு வயது எடுத்தால் இந்த மூன்று மலைகளையும் உம்மாலே கரைக்க முடியும்? என்றான். நடுங்கிப் போய்விட்டார் பரத்வாஜா.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.