லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 279 இடங்களை கைப்பற்றும் என்கிறது எக்ஸிட்போல். இதுவரை அனைத்து ஊடகங்களுமே மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளன. என்.டி.டிவி. தொலைக் காட்சியும் நேற்று எக்ஸிட்போல் முடிவுகளை வெளியிட்டது.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 543 இடங்களில் மொத்தம் 279 இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலை விட 138 இடங்கள் கூடுதலாகும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 103 இடங்களை கைப்பற்றும். இது கடந்த தேர்தலை விட 131 இடங்கள் குறைவு.

இடதுசாரிகள் உள்ளிட்ட இதரகட்சிகள் அனைத்தும் இணைந்து 161 இடங்களை கைப்பற்றுகிறது.

காங்கிரஸ்- 79 அதிமுக – 32 திரிணாமுல் காங்கிரஸ் – 30 இடதுசாரிகள் – 19 சிவசேனா – 15 பிஜூ ஜனதா தளம் – 13 தெலுங்கு தேசம் – 12 சமாஜ்வாடி கட்சி – 12 ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் – 12 தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி – 11 ராஷ்டிரிய ஜனதா தளம் – 10

Tags:

Leave a Reply