ஓம்காரம், இதுவே பல மந்திரங்களில் முதலில் இடம்பெறும் சொல். இந்த மந்திரத்திற்கு பல கோடி அர்த்தங்கள் உண்டு என்று புரானங்களில் சொல்வதுண்டு.

"ஓம்" சாந்தி சாந்தி என்றால் 'நிசப்தமான ஓசை' என்று பொருள்.
உபநிஷத்களில் ஓம்கார மந்திரமே முதன்மையான மந்திரம். இதுவே பிரம்மத்தை அடைய வழி.

பிரம்மம் என்றால் எல்லாம். இது தான் பிரம்மம் என்று வரையருக்க முடியாது. கணித்தில் infinity என்று ஒன்று உண்டு. அதாவது எல்லாவற்றிற்கும் மேலாக அல்லது அதுவே எல்லாம் என்று பொருள். பிரம்மமும் அப்படி தான்.

ஒம்கார மந்திரமே 'பிரணவ' மந்திரம். 'பிரணவம்' என்றால் சுவாசம் என்று பொருள். மனிதனுக்கு சுவாசம் எவ்வளவு முக்கியமோ அதே போல இந்த மந்திரமும் முக்கியம் என்பதை எடுத்துக் காட்டவே இந்தப் பெயர்.

பிரம்ம தேவன் உலகை படைப்பதற்கு முன் எழுந்த ஓசை தான் 'ஓம்'.


பிரம்மா மும்மூர்த்திகளில் முதலாமவர். இவருக்கு படைக்கும் கடவுள் என்ற பெயரும் உண்டு. இவரே ஞானம், அறிவு, பக்தி போன்ற கண்ணுக்கு தெரியாதவைகளை வழங்கும் கடவுள். அதனால் தான் இவருக்கு கோவில்களே கிடையாது என்று சொல்வதுண்டு.

மும்மூர்த்திகளில் இரண்டாமவர் விஷ்ணு. இவர் காக்கும் கடவுள். பூமியில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் புதிய அவதாரம் எடுத்து தர்மத்தை காப்பவர். மூன்றாமவர் கைலாயத்தில் இருக்கும் சிவன். இவரே அழிக்கும் கடவுள்.

ஒரு முறை முருக கடவுள் பிரம்மாவிடம் ஓம்காரத்திற்கு விளக்கம் கேட்டார். பிரம்மாவும் பத்தாயிரம் விளக்கங்களை கூறினார். அதனால் திருப்தி அடையாத முருகப் பெருமான் அவரை சிறைபிடிக்கும் படி உத்தரவிட்டார். இதை கேட்டதும் சிவபெருமான் ஓம்கார மந்திரத்திற்கு பத்துலட்சம் விளக்கங்களை எடுத்து கூறி முருகனை சமாதான படுத்த முயன்றார். ஆனால் முருக பெருமானோ தந்தைக்கே பத்து கோடி விளக்கங்களை எடுத்துரைத்தார் என்று ஒரு புராண கதை உண்டு.

'அவும்' என்பதே ஓம்காரத்தின் சரியான உச்சரிப்பு.

"ஓம் கார மந்திரத்தில்" நான்கு நிலைகள் உள்ளன.

முதல் நிலை, விழிப்புடன் இருக்கும் நிலை (அ)
இரண்டாம் நிலை, கனவு நிலை (வு)
மூன்றாம் நிலை, உறங்கும் நிலை (ம்)
நான்காம் நிலை, அமைதி (துரிய நிலை)

சம்ஸ்கிருதத்தில் ஓம்

ஓம் என்ற சொல்லில் நான்கு நிலைகள் உள்ளது போல், அதன் வடிவிலும் நான்கு நிலைகள் உள்ளன.

கீழே உள்ள பெரிய வளைவு முதல் நிலையை குறிக்கிறது.
மேலே உள்ள சிறிய வளைவு மூன்றாம் நிலையை குறிக்கிறது.
நடுவே வளைந்து இருக்கும் வளைவு கனவு நிலையை குறிக்கிறது.

மேலே உள்ள புள்ளி, அதன் கீழே உள்ள சிறிய அரைவட்டம் பிரம்மத்தை குறிக்கிறது.

ஓம் உச்சரிப்பதால் ஏற்படும் நன்மை

1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறும்.
2. மனம் சஞ்சலப் படுகிறதா, ஓம்கார மந்திரத்தை 50 முறை ஜபியுங்கள்,
உங்கள் கவலை கரைந்து போகும்.
3. தினமும் ஓம்காரத்தை ஜபித்து தியானம் செய்பவர்கள் முகம் தேஜசுடன் இருக்கும்.

ஒம்காரத்தை தியானம் செய்வது எப்படி?

அமைதியான, தூய்மையான இடத்தை தேர்தெடுத்து வசதியாக அமருங்கள். உடல் தசைகளை தளர்த்தி அமைதியாக கண்களை மூடுங்கள். உங்கள் கவனத்தை இரு புருவங்களுக்குள் கொண்டு வாருங்கள். உங்கள் பிரச்சைனைகள், சந்தோஷங்கள் என்று எதை பற்றியும் யோசிக்காமல் மனதை ஒரு நிலை படுத்தி ஓம் என்று ஜபியுங்கள். வெறும் வாயினால் ஜபித்தால் மட்டும் போதாது. பிரம்மத்தின் பொருளை உணருங்கள். உங்கள் உடல் பொருள் அனைத்திலும் பிரம்மத்தை உணருங்கள்.

இவ்வாறு தினமும் மூன்று வேளைகள் செய்து வருவது மிகவும் நல்லது.

இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும் என்று சொல்வது வழக்கம். அது என்ன 108 கணக்கு ?

சூரியனுக்கும் சந்திரனுக்கு உள்ள இடைவெளி தோராயமாக அதனதன் உருவத்தினால் 108 மடங்கு உள்ளது. இதை குறிப்பதே 108 கணக்கு.

ஓம் , ஓம்கார் மந்திரத்தின் சிறப்பு, ஓம் மந்திர சிறப்பு, ஓம்கார மந்திரத்தின் சிறப்பு, ஓம் மந்திரம்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.