பிரதமர் நரேந்திர மோடியின் 2வது ஊரடங்கு அறிவிப்பை   (ஏப்ரல் 14) நாட்டிலேயே மிகவும் உச்ச பச்ச பதற்றத்துடன், நடுக்கதுடன்,  மிகவும் பயத்துடனே எதிர்கொள்வதை போன்று பில்டப் கொடுத்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரதின் செயல் அரசியல் அறியாதவர்களுக்கு சரி என்றிருக்கலாம், ஆனால் அறிந்தவர்களுக்கு பல கேள்விகளை  தான் எழுப்பியிருக்கும்!.

அதாவது மத்தியில் 10 வருடம் மத்திய அமைச்சராக இருந்து நாட்டின் நிதி நிலைகளை மோசமாக்கிய பொது வராத வருத்தம் . 2ஜி, அந்நிய செலாவணி  மோசடி. திவாலாக போறவருக்கு  எல்லாம் கோடிகளை அள்ளி இறைத்து வங்கிகள்   திவாலுக்கு அடித்தளம் இட்ட போது, ஏழைகளின் 2500 கோடி  பணத்தை சுருட்டிய சாராத சிட்பண்டின் வழக்கறிஞராக தனது மனைவி இருந்த  போதெல்லாம் எழாத பதற்றம்,  14 நாடுகளில் சொத்து 15 அந்நிய வங்கிகளில் கணக்கு, அதில் 30000 கோடிக்கும் அதிகமான பண வரத்து என்று நாட்டை சுரண்டிய போதெல்லாம் வராத பதற்றம். இப்போது வருகிறதா? என்ற கேள்விதான் அது!.

அப்படி என்ன பில்டப் கொடுத்தார்; கொரோனா நோய் தடுப்புக்கு, ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி வரை நிதி திரட்டி தர முடியும் என்று ஒருநாள்!.

“ஊரடங்கு நீடித்தாலும் மக்கள் வாழ வேண்டுமே? மத்திய அரசிடம்  ரூ 30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம். இதில் ரூ 65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தரலாமே.. நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் என்று பதற்றத்துடன்  ஒருநாள்!!”

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000ம் கொடுங்கள் மத்திய அரசிடம் நிறைய பணம் இருக்கிறது இப்படியாக மற்றொரு நாள்.எல்லாம் மக்களை குழப்பிவிடும் வேற்று மாயாஜால வார்த்தைகள் அவ்வளவே .

இன்று கொரோன உலகையே அச்சுறுத்துகிறது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஆனால் 130 கோடி கட்டுக்கடங்கா மக்கள் தொகை கொண்ட தேசம் கட்டுப் படுத்தியுள்ளது. கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்று உறுதியாக கூறி வருகிறது. ஆனால் சில கோடி பேர்களை  கொண்ட இத்தாலி,ஸ்பேயின் போன்ற நாடுகள் திணறி வருகிறது. கட்டுப்படுத்தும் முகம் தெரியாமல் அலரி வருகிறது.

இங்கே அரசின் கட்டுப்பாடுகளால் பாதிக்கப் படாதோர் இல்லவே இல்லை என்று கூறி விட முடியாது. அதைவிட நிலைமை விரைவில் சீராகும், இருப்பதை வைத்து அமைதியுடன் தேசத்துக்கு வலு சேர்ப்போம் என்ற நம்பிக்கையுடன் தினம் தினம் பல துன்பங்களை கடந்து கொண்டு இருப்போர்  கோடான கோடிகள்  என்றால் அது மிகையாகாது. அதற்கு மூன்று முறை மாநில முதல்வர், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடரில் இருந்து மக்களை விரைவில் மீட்ட, 6 வருடமாக பிரதமராக நாட்டை வழிநடத்த நரேந்திர மோடியின் மீது வைத்த நம்பிக்கை தான் அது.

ஆனால் தாங்கள் ஆட்சியை விட்டு செல்லும் போது கூட மத்திய எரிபொருள் நிறுவனத்துக்கு 1.4லட்சம் கோடி பாக்கி. பல்வேறு மணியங்களுக்காக 1,5லட்சம் கோடி பாக்கி, பாக்கி என்று அடுத்து வந்த மோடி அரசிடம் நிதி சுமைகளை மட்டுமே கொடுத்துவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இப்போது கூறுகிறார்.  மத்திய அரசிடம்  நிறைய பணம் இருக்கிறது என்று.

மகிழ்ச்சி!!. ஆம் இருக்கிறது ஊழல்களை கட்டுபடுத்தியதன் மூலம், பல்வேறு  மானியங்களை நெறிப்படுத்தியதன் மூலம்,  முறைப்படுத்த பட்ட வரிகளின் மூலம், ஆக்க பூர்வமான செலவீன கட்டுப்பாடுகளின்  மூலம் திரட்டப்பட்ட நிதி இது . இதை திரட்டியவருக்கு தெரியாதா எப்படி முறைப்படுத்தி செலவழிப்பது என்று. 5000ம் என்ன 10000ம் கூட கொடுக்கும் இந்த அரசு சரியான நேரத்தில்.

நமது வருடாந்திர பட்ஜெட் செலவினங்களை விட, பல மடங்கு கொரோன நிவாரணத்துக்கே  நிதி ஒதுக்கிய  அமெரிக்காவால் கூட  சொல்ல முடியாததை நமது இந்தியா தைரியமாக தெளிவாக கூறியதே. எங்களுக்கு பொருளாதாரத்தை விட மக்களின் உயிர்தான் முக்கியம் என்று!, பணம் ஒன்றால் மட்டுமே அனைத்தையும் சரி செய்துவிட முடியும் என்றால்!. தற்போதைய அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளின் அலறல் நிலைக்கு காரணம்தான்  என்ன  மீஸ்டர் சீமாட்டி  சிதம்பரம்.

நன்றி  தமிழ் தாமரை VM வெங்கடேஷ் 

Comments are closed.