தமிழகத்தில் புயலால் ஏற்பட்டசேதத்தை ஆராய பாரதிய ஜனதா சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது.இதுதொடர்பாக சனிக்கிழமை பாரதிய ஜனதா மாநில_செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை வருமாறு :புயல், மழையால் முப்பது பேர் வரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பாரதிய ஜனதா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இழப்பீடுகளை மதிப்பீடுசெய்யவும், துயரத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறவும் பாஜக சார்பில் எட்டு பேர் கொண்டுகுழு அமைக்கபடுகிறது.மாநிலத் துணைதலைவர் எச்.ராஜா தலைமையிலான இந்த குழுவில் கட்சியின் துணை தலைவர் திருமலைசாமி, பொது செயலாளர் எஸ்ஆர்.சரவணபெருமாள், சுப.நாகராஜன், மாநில செயலாளர்கள் சு.ஆதவன், கறுப்பு முருகானந்தம், மாநில விவசாய_அணி தலைவர் பாஸ்கரன், விவசாய அணி_பொறுப்பாளர் காவி.கண்ணன் போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் ஜனவரி 1ல் ஆய்வு மேற் கொள்வார்கள். ஆய்வு_அறிக்கையை உடனடியாகபெற்று, மத்திய மாநில அரசுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பாரதிய ஜனதா துரிதப்படுத்தும் என அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.