திருப்பாற்கடலில் யோக நித்திரையில் கண்கள் மூடி கிடந்தார் திருமால். பக்கத்திலே திரு'வாகிய மகாலட்சுமி. மகாலட்சுமிக்கு என்ன தோன்றியதோ தெரியாது! தன் தோழிககளுடன் பூவுலகுக்கு வந்தாள். இங்கே தொண்டை நாட்டிலே அழகான ஒரு ஊரைக் கண்டாள். "இனி இங்கேயே இருப்போம்' என முடிவேடுத்துவிட்டால்

."திரு'வாகிய மகாலட்சுமி வந்து தங்கியதால் அந்த பகுதி , "திருநின்றவூர்" ஆனது.

திருமகள் மகாலட்சுமி விலகி போனால் மனிதர்கள் அழிந்து விடுவார்க ளென்பது அப்புறம்; ஆனால் அவள் கணவனான மாலவனே அயர்ந்து விடுவானென்கிறது புராணம்.

அங்கே பாற்கடலில் கண் மலர்ந்து பார்த்த கடவுள், தன் அருகே எப்போதும் அமர்ந்திருக்கும் நாயகியை காணாமல் அதிர்ச்சி யடைந்தார் . உடனே துணையை தேடி புறப்பட்டார். திருநின்றவூர் வந்தார் திருமகளைக் கண்டார்.

""தேவி! நீயெனக்குத் தாரம் மட்டும் தானா? தாயும் ஆனவள் அல்லவா? எதற்காக என்னை பிரிந்தாய்?'' என்று தனது அன்பை பொழிந்தார்!

சமுத்திரராஜனின் (லட்சுமி பாற்கடலில் பிறந்தததால் சமுத்திர ராஜன் தந்தையாகிறான்) மகளான லட்சுமி, பரந்தாமனுக்கே தாயானது எப்படி? இங்கே தாய் என்பது பத்துமாதம் வயிற்றில் சுமந்ததால் அல்ல; உள்ளத்தில் வைத்து தாங்கியதால்! ஒரு நல்ல மனைவியின் இலக்கணம் அதுதானே? இதை உலகுக்கு உணர்த்தவேதான் , ""என்னைப் பெற்ற தாயார்'' என லட்சுமியை திருமாலே அழைத்து அகம்குழைந்தார்.

அன்று முதல் திருநின்றவூர், என்பது திருமகள் மட்டும் அல்லாமல் திருமாலும் நின்ற ஊராக மாறியது. சமுத்திர ராஜனின் வேண்டு கோளுக்கிணங்க பெருமாளும், தாயாரும் இந்ததலத்தில் திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

திருநின்றவூர் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் பெருமாள் கிழக்குநோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சிதருகிறார். பவுர்ணமி, திருவோணம்,உத்திரம், வெள்ளி, சனிக்கிழமைகள் விசேஷ நாட்களாகும்.

திருநின்றவூர்   , திவ்யதேசம்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.