காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் கண்டி கிராமத்திலிருந்த நமீம்அக்தர் என்ற பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்தது. அவசரத்துக்கு அருகில் எந்த ஒரு மருத்துவ மனையும் கிடையாது. போக்குவரத்து வசதிகளும் கிடையாது.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் உதவி கரம் நீட்டினர் ராணுவ வீரர்கள் அந்த பெண்ணை ஒரு

கயிற்று கட்டிலில் வைத்து 7கி.மீ. தூரத்திற்கு தூக்கிசென்றனர். பிறகு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர் . உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்ததால் அவருக்கு சுகபிரசவம் நடந்தது அழகான_பெண் குழந்தையும் பிறந்தது.

மனிதா பிமானம் நிறைந்த நமது ராணுவ_வீரர்களின் பணி பாராட்ட தக்கது இரு உயிரை காப்பாற்றிய நமது இராணுவ வீரர்களை எத்தனை அரசியல் வாதிகள் மனித உரிமை அமைப்புகள், அறிவுஜீவிகள் மற்றும் பத்திரிக்கைகள் பாராட்டின , தினமும் கடும் குளிரிலும் பணியிலும் இருந்து இந்த பாரத தேசத்தை போற்றி பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களின் தியாகத்தையும் , அர்ப்பணிப்பையும் பற்றி எந்த செய்தி நிறுவனங்களுமோ , அல்லது அரசியல்வாதிகளோ பெரும்பாலும் வாய்திரப்பதேயில்லை,

ஒரு நடிகர் அல்லது நடிகை எங்கயாச்சும் கீழே விழுந்து அவங்களுக்கு எங்கேயாச்சும் சின்ன கீறல் விழட்டும் அவ்வளவுதான் நம்ம தொலைக்கட்சியில தலைப்பு செய்தியே அதுவாதான் இருக்கும் , அதேநேரத்தில் தீவிரவாதிகளுடனான மோதலில் உயிர் தியாகம் செய்யும் நமது இராணுவ வீரர்களின் தியாகத்தை பற்றி பெரும்பாலும் அவர்கள் வாய்திரப்பதேயில்லை ஜெய் ஜவான்,,,,,,,,

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Tags; இந்திய ராணுவம், இந்திய ராணுவத்தில், ராணுவத்தின் ,இந்திய ராணுவ, இராணுவத்தின் இராணுவத்தை, இராணுவம்,

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.