ஆழ்வார்குறுச்சி ஸ்ரீ சைலபதி ஸ்ரீ பரமகல்யாணி ஆலயம் திருநெல்வேலியில் உள்ளது. இந்த கிராமம் திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அம்பாசமுத்திரம் – தென்காசி நெடும்சாலையில் உள்ளது. இயற்கை வளம் சூழ்ந்த இனிய சூழலில் மலைசாரலில் உள்ள இந்த ஆலயம் உள்ள இடத்தில் அனுசுயா-அத்ரி தம்பதிகள் இருந்துள்ளதான ஐதீகம் உள்ளது.

ஸ்ரீ சைலபதி ஸ்ரீ பரமகல்யாணி ஆலய தல வரலாறு என்ன?

ஒரு சமயம் பாண்டிய நாட்டின் ஒரு அரசன் அஸ்வமேத யாகம் செய்தான். அப்போது நாடெங்கும் அவன் அஸ்வமேத யாக குதிரையை அனுப்பிய போது இந்த இடத்தில் வந்ததும் அந்தக் குதிரை அப்படியே நின்று விட்டு மேலே நகர மறுத்ததாம். அதன் காரணம் புரியாமல் விழித்தபோது அங்கிருந்த பண்டிதர் பிரசன்னம் பார்த்து விட்டு அந்த இடத்தில் பூமியில் தோண்டிப் பார்க்குமாறு செய்தி வந்ததாகக் கூறினாராம்.

ஆகவே குதிரையை பின்னால் அழைத்து நிறுத்தியப் பின் குதிரை நின்ற அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் கிடைத்ததாம். அனைவரும் ஆச்சர்யம் அடைந்து நின்றபோது ஆசிரியாக ஒரு குரல் கேட்டது. அது 'மன்னா எனக்கு இங்கேயே ஒரு ஆலயம் எழுப்பி வழிபட வேண்டும். அது மட்டும் அல்ல இங்கிருந்து அருகில் உள்ள கீழாம்பூர் என்ற ஊரில் கிணற்றில் மூழ்கிக் கிடக்கும் பரம கல்யாணியையும் அழைத்து வந்து எனக்கு இங்கேயே திருமணம் செய்து தர வேண்டும்' எனக் கூறிவிட்டு அந்த கிணறு இருந்த இடத்தையும் கூறியதாம்.

உடனே அந்த மன்னன் கீழாம்பூருக்குச் சென்று குறிப்பிட்ட அந்தக் கிணற்றில் கிடந்த அம்பிகையை எடுத்து வந்து சிவலிங்கம் கிடைத்த இடத்திலேயே ஒரு ஆலயத்தைக் கட்டினாராம். அங்குள்ள சிவபெருமானை ஸ்ரீ சைலபதி என்றும், அம்மனை ஸ்ரீ பரமகல்யாணி என்றும் அழைத்து வழிபட்டார்கள். அந்த ஆலயத்தில் சிவலிங்கத்தின் பின்னால் ஜடை முடியோடு பரமேஸ்வரி காட்சி தருகிறாள்.

இந்த ஆலயத்தில் மிகப் பெரிய நந்தி ஒன்றும் உள்ளது. அதன் கதையும் சுவையானது. ஆலயம் அமைக்கப்பட்டபோது அதி அற்புதமான கலை அழகில் செய்யப்பட்ட அந்த நந்தி தேவர் சிலை செதுக்கப்பட்டு முடிந்ததும் உண்மையிலேயே அவர் உயிர் பெற்று எழுந்தாராம். ஆகவே அவரை சமாதானப்படுத்தி அங்கேயே அமர வைத்தார்களாம். அதற்கு சான்றாக அதன் காலில் ஆணியை அறைந்து வைத்ததான தடயம் உள்ளதாம்.

ந்த சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர் மிக்க சக்தி வாய்ந்தவர் என்பதினால் தாம்பிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து அதற்கு அபிஷேகம் செய்கிறார்கள். இந்த ஆலயத்தில் நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றது. ஆலய தீர்த்தத்தின் பெயர் அத்ரி தீர்த்தம். ஒவ்வொரு வருடமும் பதினோரு நாள் திருவிழா -ஸ்ரீ சைலபதி- ஸ்ரீ பரம கல்யாணி திருமணத்தோடு- நடைபெறுகின்றது. ஆழ்வார்குறிச்சியில் அக்னி பகவான் சாப விமோசனம் பெற்றுள்ளார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

TAGS; சிவன், ஆழ்வார்குறுச்சி, ஸ்ரீ சைலபதி, ஸ்ரீ பரம கல்யாணி, ஆலயம் , சிவன் கோயில், ஆழ்வார்குறுச்சி, ஸ்ரீ சைலபதி, சிவன் கோயிலும்

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.