பாரதிய ஜனதாவுக்கும் அ.தி.க.மு.க வுக்கும் இடையே இயற்கையான_கூட்டணி அமைந் துள்ளது என்பதை ஆரம்பம்முதலே கூறிவருகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அதிமுக நேரடியாக கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை என்ற போதும், நாடாளுமன்ற கூட்ட தொடர்களில் இருகட்சிகளின் ஒற்றுமையும் மேலோங்கி வருகிறது.

நரேந்திர மோடி, ஜெயலலிதா போன்ற வெளிப்படையான தலைவர்கள் தான் நம் தேசத்துக்கு இப்போதைக்கு தேவை.நாட்டின் பொருளாதாரம்_மேம்பட, மத்தியில் வலுவான ஆட்சி தேவை, அதே சமயம் மாநிலங்களில் பலமான_ஆட்சியை அமைக்காமல்,

மத்திய அரசை மட்டும் சக்திவாய்ந்ததாக மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை. எதிர்பாராதவிதமாக காங்கிரஸ் அரசு இதைத்தான் செய்து வருகிறது. மாநிலங்களினுடைய அதிகாரங்களைப் பறித்து, மத்திய அரசைப் பலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள் மீது விரோதப் போக்கை காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவை ஆளும் தகுதி தங்களுக்கு மட்டுமே இருப்பதாக காங்கிரஸ் நினைத்து கொண்டிருப்பதே, இதை போன்ற நடவடிக்கைகளுக்கு காரணம். கடந்த காலங்களிலிருந்து எந்த பாடங்களையும் இக்கட்சி கற்று கொள்ளவில்லை என்பதே இதில் தெளிவாகிறது.

இதை போன்ற தவறான எண்ணங்களை முறியடிக்க, ஜனநாயக ஆட்சி மலரவேண்டும் எனும் எண்ணம் உடையவர்களும் , சுமூகமான மத்திய – மாநில உறவுகள் நிலைக்க வேண்டும் என நினைப்பவர்களும் ஒருங்கிணையவேண்டும். பாரதிய ஜனதாவும் -வும் அதிமுக-வும் ஒருங்கிணையவேண்டும்’ என அத்வானி தெரிவித்தார் .

{qtube vid:=uQnSIeRp1cs}

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.