காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் 3 ராணுவவீரர்கள் உயிர் நீர்த்ததால், தேசமே சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் திரு.அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே, பஞ்ச்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் மறைவுக்கு இரங்கல்தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் திரு.அருண்ஜெட்லி, வீரமரணம் அடைந்த வீரர்களின் மன தைரியத்தை எண்ணி பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். நாட்டைப் பாதுகாப்பதற்காக வீரர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பலருக்கும் முன்மாதிரியாக இருப்பதாககூறினார். மேலும், பலியான வீரர்களின் குடும்பத்துக்கு ஆறுதல்கூறுவதுடன், படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்துகொள்வதாகவும் தெரிவித்தார். இந்திய வீரர்களின் இழப்பால், நாடு சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply