கவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்றி புலம்ப வைத்த பரீந்திரகுமார் கோஷ் 3  அலிப்பூர் சதி வழக்கில் பரிந்திரகுமார் கோஷ் கொடுத்த வாக்குமூலம்

"கனம் நீதிபதி அவர்களே! நான் ஒரு வங்காளி-இந்தியன்! எங்கள் முன்னோர்கள் ஏமாந்தபோது, எங்கள் தலையில் ஏறி, முதுகில் சவாரி செய்யும் பிரிட்டஷ் பிரதிநிதிகள் எங்கள் பாரதமாதாவை துண்டு

துண்டாக்கினார்கள், இதனைத் தடுப்பதற்கு ஒரே வழி பாரதநாடு சுதந்திரம் பெறுவதுதான்,! சுதந்திரம் என்றால் சும்மா வருமா? பேசினால் வருமா? பிரசங்கம் பண்ணினால் வருமா? கெஞ்சினால் கிடைக்குமா? ஒருக்காலமும் கிடைக்காது என்பதினை இரண்டாண்டுகளாக பிரச்சாரம் செய்த பின்னர்தான் புரிந்து கொண்டேன்! எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு.சுதந்திரத்திற்கும் ஒரு விலை உண்டு. அந்த விலை என்ன? அன்னையின் அடிமை விலங்கொடிக்க தங்கள் ஆவியையே அர்ப்பணிக்கும் துணிவும், எவ்வித ஆபத்துகளையும் துச்சமாக மதித்து எதிர்கொள்ளும் வீரமும் கொண்ட சில நூறு இளைஞர்கள், இந்த லட்சியப் பணியில் தங்களை ஈடுபடுத்தி இழக்கவும் சம்மதிப்பதுதான், அதைத்தான் நானும் செய்தேன்,

அப்படிப்பட்ட சில இளைஞர்களைத் தேடித் பிடித்தேன். புரட்சிக்குத் தேவையான ஆயுதங்களையும் சேகரித்தேன், வெடிகுண்டுகளைத் தயாரித்தேன், அவற்றை எறியவும் இயக்கவும் பயிற்சி அளித்தேன், காரியம் முடிந்ததும் நமது செயல்களின் விளைவுகள் எதுவாக இருந்தாலும், நமது செயல்களுக்கான பொறுப்பினை எவரிடத்திலும் மறைக்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் உறுதி வாங்கிக் கொண்டேன்,

அதனால்தான் சம்பந்தமில்லாத அப்பாவிகளையும், நிரபராதிகளையும் சிரமத்துக்குட்படாமல் காப்பாற்ற முடிந்தது, எங்கள் தாயகம் எங்களுடையதுதான் என்கிறோம்!

எங்கள் இனம்தான் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு ஆளும்! என்கிறார்கள் ஆட்சியாளர்கள் "ஆளவிடமாட்டோம்: உங்களை வாழவும் விட மாட்டோம்! என்பதுதான் எங்கள் பதில், இதற்கு உங்கள் தீர்ப்பு என்ன? மரணமா? ஜென்மமா? கடுங்காவலா? உங்கள் தீர்ப்பு எதுவானாலும் எங்களுக்கு மகிழ்ச்சியே! எங்களை விடுதலை செய்தாலும் நாங்கள் இதைத்தான் மறுபடியும் செய்வோம்,"

இம்முறையில்தான் இருந்தது பரிந்திரகுமார் கோஷ் கொடுத்த வாக்குமூலம்

இந்த அச்சமற்ற, விசுவாசமுள்ள, நேர்மை மிக்க இதய சுத்தியுள்ள இளந் தலைவனுக்கு எதிராக வாதட நேரிடுகிறதே என்பதற்காக நான் வேதனைப் படுகிறேன், என்று கூறிய அரசு தரப்பு வழக்கறிஞரான நார்ட்டன் என்ற ஆங்கிலேயர் "இருந்தாலும் என் கடமை" என்று இழுத்தவாறே தம் வாதத்தினை முடித்தார்,

நன்றி ; ராம்குமார்

Leave a Reply